significant other
முக்கியத்துவமுள்ள பிறர்
தமிழ் விளக்கம்
ஒருவருக்கு நெருக்கமான, அன்பான, குடும்ப முறையில் உறவான, பரஸ்பரம் சார்ந்துள்ள நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாடல். உறவுமுறைகளைக் குறிப்பிடும் போது பாலின சமத்துவத்தை, பாரபட்சமற்ற தன்மையைக் குறிக்க, ஒரு குறிப்பிட்ட நபரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவரை அல்லது காதல் வயப்பட்ட உறவை ஆண், பெண் என்று குறிக்காமல், முக்கியத்துவம் மிக்க நபர் (significant others) என்று குறிப்பதுண்டு.
பார்க்க: Relevant others - தொடர்புடைய பிறர் - பழகுமுறை, பழகும்பண்பு, செயல் பங்கு கோட்பாடு என்பது அவரவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கினங்கவே தீர்மானிக்கப்படுகிறது என்று சமூகவியலும், சமூக உளவியலும் எடுத்துரைக்கின்றன. உறவுமுறைகளைக் குறிப்பிடும் போது பாலின சமத்துவத்தை, பாரபட்சமற்ற தன்மையைக் குறிக்க, ஒரு குறிப்பிட்ட நபரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவரை அல்லது காதல் வயப்பட்ட உறவை ஆண், பெண் என்று குறிக்காமல், முக்கியத்துவம் மிக்க நபர் (significant others) என்று குறிப்பதுண்டு. தொடர்புடைய நபர் என்பதும் பல நேரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டாலும், தீவிர உணர்வற்ற, அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத அல்லது குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கு மட்டும் மேற்கோள் காட்டக்கூடிய நபர்களையும் குறிக்கப் பயன்படும் சொல்லாடல். கணவனுக்கு மனைவியும், தாய்க்குக் குழந்தையும், சமூகப்பணியில் வாடிக்கையாளருக்கு சமூகப்பணியாளரும், மருத்துவமனையில் நோயாளிக்கு உதவ உடனிருப்பவரும், வகுப்பறையில் ஆசிரியருக்கு மாணவரும் தொடர்புடைய நபர்கள்.

English
A generic lay term referring to one who, because of affection, proximity, family relationship, or codependency need, is considered more important than others. See also relevant other.