single-focus group

ஒற்றை நோக்குடைய குழு

தமிழ் விளக்கம்

ஒரு அமர்விலோ அல்லது தொடர்ந்து நடக்கும் அமர்வுகளிலோ ஒரே மாதிரியான அல்லது தொடர்புடைய பிரச்சனைகளைப் பற்றி மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட ஏற்படுத்தப்படும் சமூகப் பணிக்குழுக்கள் அல்லது உளப்பிணிச் சிகிச்சைக் குழுக்கள். ஏகவினமான அல்லது ஓரியல்பான இக்குழுக்கள் மனநல அமைப்புகளிலும், சுயஉதவி அமைப்புகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
பார்க்க: focus group - தெளிவான கருத்து உருவாக்கும் குழு, கருத்துக் குவிக்கும் குழு, ஒன்றை விவாதிப்பதற்காகக் கூடும் குழு, ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றியோ, கருத்தைப் பற்றியோ ஒவ்வொருவராக சந்தித்துப் பெறமுடியாத தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற, 6-12 நபர்கள் அடங்கிய குழுவாகக் கூடி கலந்துரையாடுவது.

English

An orientation in social group work or group psychotherapy in which all the group members share the same or closely related problems and, in single or ongoing sessions, work only on those problems. These groups, also called homogeneous groups, are becoming more common in mental health settings and predominate in self-help groups. See also focus group.