sit-in

உள்ளிருப்புப் போராட்டம்

தமிழ் விளக்கம்

தொழிற்சாலை அல்லது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்கள் பணிக்கும் பணியிடத்திற்கும் சென்று, மிக அமைதியான முறையில், உள்ளிருந்து கொண்டே தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணி செய்ய மறுப்பது. தொழிற்சாலைகள் தவிர, சமூகப் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரக் குறிக்கோள்களை அடைய விரும்பும் கோரிக்கையாளர்கள் / போராட்டக்காரர்கள், தங்களுடைய கோரிக்கைகளை உரியவர்களுக்கு தெரியப்படுத்தவோ, நிறைவேற்றவோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு போராடுவது. எடுத்துக்காட்டாக இனப்பாகுபாட்டை கடைப்பிடித்த உணவகங்கள் மற்றும் பேருந்துகளில் தங்களுக்கு மறுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துகொண்டு கருப்பினத்தவர் போராடியது. உள்ளிருப்புப் போராட்டங்கள் மனித உரிமை ஆர்வலர்களாலும், ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆலய நுழைவுப் போராட்டத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

English

A method of passive resistance in which demonstrators occupy a public place and refuse to leave until action is taken to redress their grievances. Sit-ins were used extensively during the Civil Rights movement of the 1960s, especially in segregated restaurants, legislators' offices, and bus stations.