situational ethnic identity

இடத்திற்கேற்ற இன அடையாளம்

தமிழ் விளக்கம்

சூழ்நிலைக்கேற்ப சில நன்மைகளைப் பெறுவதற்கோ அல்லது ஒரு குழுவுடன் இணக்கமாவதற்கோ, அன்னியப்படுத்தலிலிருந்து தப்பிப்பதற்கோ, ஒரு குறிப்பிட்ட வம்சாவழியினர் என்ற சுய அடையாளத்தை மாற்றிக்கொள்வது. எடுத்துக்காட்டாக உள்ளூரில் இருக்கும் போது, ஜாதி அடையாளத்துடனும், வெளியூரில் இருக்கும் போது ஊர் அடையாளத்துடனும், உள்நாட்டில் இருக்கும் போது பிராந்திய அடையாளத்துடனும், வெளிநாட்டில் இருக்கும் போது தேசிய அடையாளத்துடன் இருப்பது. ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாக இரு என்ற சொல்லாடல் இதற்கு எடுத்துக்காட்டு.

English

The process of changing one's self-identification as a member of a national-origin group one or many times to achieve advantages as circumstances arise. For example, a person of Puerto Rican origin might designate himself as such when with other Puerto Ricans and as Hispanic when with "Anglos".