situational tests

செயல்முறைச் சோதனைகள்

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளரின் தற்போதைய நடத்தையையும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அவரை உட்படுத்தும்போது அவர் எப்படி நடந்துகொள்வார் என்று அறிந்துகொள்ளவும், ஆய்வு செய்யவும் சமூகப்பணியாளர்கள் கையாளும் செயல்முறை. இந்த முறையில் ஒரு வாடிக்கையாளரிடம் பிரச்சனைக்குரிய சம்பவத்தை விவரித்தோ, அதைக் காணொளி மூலமோ அல்லது வகிபாகச் செயலாக (role play) உருவகித்தோ, அல்லது எழுத்துபூர்வமான விளக்கக் குறிப்புகள் கொடுத்தோ அதற்கு வாடிக்கையாளர் எப்படி மறுவினை ஆற்றுவார் என்று அறிந்து அதற்கேற்பச் சிகிச்சை முறைகளைத் திட்டமிடுவது.

English

A procedure social workers in direct practice and research use to measure client behavior and behavioral changes by having the client perform some contrived tasks while under observation. The social worker describes a problem-situation and shows how a person might respond. Then, using such tools as videotape simulations, role plays, or written descriptions of problems, the client demonstrates probable responses when confronted with the actual situation.