skill

சாமர்த்தியம், சாதுர்யம், திறன், புலமை

தமிழ் விளக்கம்

1. முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை அல்லது செயலைக் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஆற்றலைச் செலவழித்து செய்து முடிக்குமளவு வளர்த்துக் கொண்ட ஆற்றலைத் திறன் எனலாம். திறன் என்பது பயிற்சியின் மூலமாகப் பெறுவது. ஆற்றல் என்பது உள்ளார்ந்தது. 2.. சிக்கலான செயல்களைச் செய்து முடிக்கத் தேவையான சிந்தனைத்திறன் (cognitive skills), உபகரணங்களைக் கையாளும் திறன் (technical skills), மனிதர்களோடு பழகும் திறன் (interpersonal skills) போன்றவற்றைத் திட்டமிட்டு, பயிற்சியின் மூலம் முறையாக வளர்த்துக்கொண்ட ஆற்றலையே திறன் என்பர். 3. ஒருவர் தன்னுடைய உடல்வலிமை, அறிவு, ஆளுமை மற்றும் இதர ஆற்றல்களைப் பயன்படுத்தித் தன்னுடைய குறிக்கோளை அடையப் பெற்றிருக்கும் தேர்ச்சியை அல்லது சாதுர்யத்தைத் திறன் என்றும் சொல்லலாம். திறன்களைப் பொதுத் திறன்கள் (domain-general), செயல்பாட்டுத் திறன்கள் (domain-specific) என்று வகைப்படுத்தலாம். நேர மேலாண்மை, குழுவில் பணிசெய்வது, வழிநடத்தல், ஊக்கமுடமை போன்ற திறன்கள் பொதுத்திறன் என்றும், ஒரு குறிப்பிட்ட செயலை நேர்த்தியாகச் செய்துமுடிக்கத் தேவையான திறன்களைச் செயல்பாட்டுத் திறன் எனவும் கூறலாம். ஏதுவான சூழ்நிலையும், பொருத்தமான தூண்டலும் அமையும் பட்சத்தில் திறன்கள் வெளிப்படும் என்பது பொதுவிதி. மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்பச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்குப் பரவலான திறன்கள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டு - உடல் திறன்கள் (ஓடுதல், நடத்தல், பாய்தல், தாண்டுதல்) - கல்வித் திறன்கள் (கற்றல், வாசித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல், கணித்தல், சிந்தித்தல், பகுத்தறிவு) - தொடர்பாடல் திறன்கள் (உரையாடல் நிகழ்த்துதல், ஆவணப்படுத்தல்) - கலைத்திறன்கள் (பாடுதல், ஆடுதல், நடித்தல், நகைச்சுவை, இசை, ஓவியம் வரைதல்) - ஆய்வுத் திறன்கள் (அகமாய்தல், வினவுதல் / கேள்வி கேட்டல்).

English

Proficiency in the use of one's hands, knowledge, talents, personality, or resources. A social worker's skills include being proficient in communication, assessing problems and client workability, matching needs with resources, developing resources, and changing social structures. See also social work skills, direct practice skills, and social skill.