skilled-nursing facilities (SNFs)

திறமையான நலம் பேணகங்கள்

தமிழ் விளக்கம்

திறமையான நலம் பேணகங்கள் என்பது நீண்டநாள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும், மருத்துவ வசதியுடைய நலம் பேணகங்கள். இம்மையங்கள், அமெரிக்க அரசின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிற மருத்துவப் பராமரிப்பு உதவிக் காப்பீட்டின் தரநிர்ணயத்திற்கேற்ப பயிற்சியும் சான்றிதலும் பெற்ற அனுபவம் மிக்க, குறிப்பிட்ட சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்ற செவிலியர்களின் தலைமையில் இயங்கும். திறனான நலம் பேணகங்கள் என்பது திறமையான செவிலியரின் தலைமையில் நிர்வகிக்கப்பட வேண்டுமென்பதில் மருத்துவக் காப்பீடு நடைமுறைகள் சமரசம் செய்துகொள்வதில்லை. இந்தத் திறனான நலம் பேணகங்கள், வரையறைக்குட்பட்ட குறைந்த கால மருத்துவக் கவனிப்பும், நீண்ட நாள் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சையும், நோயிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு மறுவாழ்வுப் பயிற்சியும் அளிக்க மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் அங்கீகாரம் அளித்துள்ளன.
பார்க்க: extended-care facilities (ECF) - நீடித்த பராமரிப்பு / மருத்துவ வசதிகள் - கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கின்ற நோயாளிகள், நோயிலிருந்து மீண்டு உடல் தேறி வருபவர்கள், புனர்வாழ்வு தேவைப்படுபவர்கள் போன்றோருக்கு நீடித்த மருத்துவப் பராமரிப்பு வசதிகள் செய்து தரும் மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள். 100 நாட்கள் வரை மருத்துவமனை அல்லது நலம் பேணகத்தில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதை நீடித்த மருத்துவப் பராமரிப்பு என்கின்றனர். அமெரிக்க அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் நீடித்த மருத்துவ சிகிச்சையைப் பெறவேண்டினால், அரசின் தரநிர்ணயத் தகுதி பெற்ற மையங்களில் தான் பெறவேண்டும். அந்த மருத்துவ மையங்களில் தகுதி பெற்ற மருத்துவ இயக்குனர், பதிவுபெற்ற செவிலியர், பலநிலை செவிலியப் பணியாளர்கள், தகுதிபெற்ற உணவியல் நிபுணர், (dietician) உடலியக்கச் சிகிச்சையாளர் (physiotherapist), தொழில் சிகிச்சையாளர் (occupational therapist), சமூகப்பணி இயக்குனர் போன்ற திறத் தொழிலினர் பணியாற்ற வேண்டும். அரசு அமைப்புகளாலும், பிற காப்பீடு துணை அமைப்புகளாலும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் தான், நீடித்த மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுப் பயன்கள் கொடுக்கப்படும்.

English

Health care structures and programs for patients who need relatively intensive and often long-term care (LTC), staffed primarily by more highly trained and experienced professional nurses and nurse practitioners who may be specialists in certain types of health care. These facilities are sometimes described as hybrids between nursing homes and hospitals. The designation "skilled-nursing home" also has been used in federal legislation, especially in the Medicaid provisions of the Social Security Act. These provisions required Medicaid patients in need of nursing home care to be placed in skilled-nursing homes, which were defined as being headed by a nonwaivered practical nurse. Facilities that Medicaid calls "skilled-nursing homes" range from active treatment and rehabilitation programs to limited health care. See also extended-care facilities (ECF).