skinheads
மொட்டைத் தலையர்கள்
தமிழ் விளக்கம்
மொட்டையடித்துக்கொண்டு, கும்பலாக, கோஷ்டியாக தெருவில் சுற்றித்திரியும், அயல்நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரை, வெள்ளையினத்தவர் அல்லாத பிற இனத்தவரை வெறுக்கின்ற, வெள்ளை இனப்பண்பாட்டின் துணைப்பண்பாட்டுக் குழுவினரை / இனத்தவரைக் குறிக்கும் சொல். மொட்டைத்தலையர்கள், 1960 களில் நீளமாக முடிவளர்த்து திரிந்த பாப் கலாச்சாரத்தின் எதிர்ப்பாளர்களாக, தொழிலாளர் வர்க்க மதிப்பீடுகளைப் பிரதிபலித்தவர்கள். எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும், இனங்களிலும் .மொட்டைத்தலையர்கள் என்ற துணைப் பண்பாட்டுக்குழுக்கள் உண்டு. இவர்கள் எல்லோரும் இன வெறுப்பாளர்களல்ல. வயதான மொட்டைத்தலையர்கள் பெரும்பாலும் இனம் அல்லது குழு பெருமித உணர்வுகொண்ட அமைப்புகளில் இணைந்துள்ளார்கள்.
English
Members of street gangs, most of whom are white people with shaved heads, that tend to hate authority, immigrants, and members of nonwhite races. As they become older, many skinheads affiliate with white supremacist groups.