Skinnerian theory

ஸ்கின்னரின் கோட்பாடு

தமிழ் விளக்கம்

அமெரிக்க உளவியலாளர் பி.எப். ஸ்கின்னர், கற்றலைப் பற்றி எடுத்துரைத்த கோட்பாடு. இவருடைய செய்கை நெறிநிலைப்படுத்தல் (operant conditioning) அதாவது ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகள்தாம் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும் மனநிலையை வலுவாக்கவோ அல்லது அந்தச் செயலைச் செய்யத் தூண்டும் மனநிலையை நீர்த்துப் போகவோ செய்யும் என்பது, நடத்தை மாற்றச் சிகிச்சை முறையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பார்க்க: operant conditioning - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, செயல் விளைவுகளால் தூண்டப்படும் / கட்டுப்படுத்தப்படும் நடத்தை. செய்கை நெறிநிலைப்படுத்தல் - ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகள்தாம் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும் மனநிலையை வலுவாக்கவோ அல்லது அந்தச் செயலைச் செய்யத் தூண்டும் மனநிலையை நீர்த்துப் போகவோ செய்யும் என்று பி.எஃப். ஸ்கின்னர் என்ற உளவியலாளர் கண்டறிந்து சொன்ன கருத்து. வெகுமதி, பாராட்டு (reinforcement) அல்லது தண்டனை கேலி (punishment) மூலமாக மனிதர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்தமுடியும் என்ற கோட்பாடு. செயல் விளைவுகளால் தூண்டப்படும் / கட்டுப்படுத்தப்படும் நடத்தை என்பது ஒரு மனிதன் தன் முன் அனுபவத்தால் ஒரு செயலைச் செய்வதும் தவிர்ப்பதிலிருந்தும் வேறுபட்டது.

English

The learning theories developed by American psychologist B. F. Skinner (1904-1990). His concepts, especially that of operant conditioning, have greatly influenced the development of modern behaviorism and its use in treatment.