slander

அவதூறு, வாய்மொழி அவதூறு, பழிதூற்றுரை, பொல்லாங்குரை, பொய்க்குற்றச்சாட்டு, நற்பெயர் கெடு, பெயர் கறைப்படுத்து, புறங்கூறுதல், அலர்தூற்றுதல்

தமிழ் விளக்கம்

ஒருவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கத் திட்டமிட்டுப் பழிதூற்றுதல்.
பார்க்க: libel - பழிப்புரை, புகழியுரை, (அவதூறு), பொய்யான இகழுரை, எழுத்து வழி அவதூறு, நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு, நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு, நிந்தித்து வெளியிடும் துண்டறிக்கை - ஒரு மனிதரின் மீதோ அல்லது ஒரு தொழிலின் மீதோ, நிறுவனத்தின் மீதோ, வியாபாரத்தின் மீதோ நற்பெயருக்கு களங்கம் உண்டாகும்படிக்கோ, பொது மக்களின் அபிமானத்தை சீர்குலைக்கும் படிக்கோ, கேலிப் பொருளாகும்படிக்கோ உன்ன்மையால்லாத செய்திகளை எழுத்து மூலமாகப் பத்திரிகைகளிலோ, துண்டறிக்கை மூலமோ, படங்கள் மூலமோ, குறியீடுகள் மூலமோ, கேலிச்சித்திர வடிவிலோ வெளியிடுவது.

English

Spoken false statements that damage the reputation of another person. See also libel.