sleep disorders
தூக்கமின்மை, தூக்கக் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
தூக்கத்தின் தன்மை, தூங்கும் நேரம், தூக்கத்தோடு தொடர்புடைய அசாதாரண நடத்தைகள், உடலியல்புகள், தூங்கும் போது ஏற்படும் தொந்தரவு போன்ற பல்வேறு காரணங்களால், தூங்குவதிலும், தூக்கததைத் தொடர்வதிலும் தொந்தரவு இருந்தால் அதைத் தூக்கமின்மை அல்லது தூக்கக் கோளாறு எனலாம். தூக்கமின்மையால் அவதிப்படும் ஒருவர் அதன் விளைவாக விழித்திருக்கும்போது சரிவரச் செயல்பட முடிவதில்லை. இது எந்த வயதிலும் தோன்றலாம். ஆனால் முதுமையிலேயே அதிகமாகத் தூக்கமின்மை உண்டாகிறது. தூக்கமின்மையின் தன்மை வேறுபட்டிருப்பதால், அதையொட்டி தூக்கமின்மை, நிலையற்ற (transient), தூக்கமின்மை, தீவிரமான (acute) தூக்கமின்மை, மற்றும் நாட்பட்ட/ நீடித்த (chronic) தூக்கமின்மை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையே எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை, சற்றுக் கடுமையான / தீவிரமான தூக்கமின்மை, முற்றிய தூக்கமின்மை எனமேலும் வகைப்படுத்தலாம். நிலையற்ற தூக்கமின்மையென்பது சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை நீடித்து இருக்கும். இது வேறொரு கோளாறின் விளைவாக ஏற்படக்கூடும். தூங்கும் சூழலில் மாற்றம், தூங்கும் நேரத்தில் மாற்றம், கடுமையான மனச்சோர்வு / மன உளைச்சல் ஆகியவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம். தீவிரமான தூக்கமின்மை: இந்த நிலையில் ஒரு மனிதன் மூன்று வாரம் முதல் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து நல்ல தூக்கத்தைப் பெற இயலாமல் போய்விடுகிறது. பொதுவாக இது குணப்படுத்தக் கூடிய நிலையாகவே காணப்படும். நாட்பட்ட / நீடித்த தூக்கமின்மை: இது முதன்மையான கோளாறாகவோ அல்லது மற்றொரு கோளாறினாலோ ஏற்பட்டு பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். இதன் விளைவுகள் இதன் மூல காரணத்திலிருந்து வேறுபட்டிருக்கும். தூங்கவே முடியாத நிலை, தசைகளில் தளர்ச்சி, மன மருட்சிகள், மனத்தளர்ச்சி இதனால் ஏற்படுகின்றன.
பார்க்க; dyssomnia - பலவகையான தூக்கக் கோளாறு. - தூக்கமின்மை, மிதமிஞ்சிய தூக்கம், தூக்கத்தின் அளவு, நேரம், மற்றும் தன்மை, சுவாசத் தொடர்பான தூக்கக் குறைபாடு (மூச்சுத்திணறல்), மற்றும் சிர்கேடியன் இசைவில் (உயிரினங்களில் தினசரி (24 மணி நேர அவகாசத்தில்) நடக்கும் செயல்பாடுகளின் ஒழுங்கு இயல்புகள் மாறுவதால் ஏற்படும் தூக்கக் கோளாறு. என்று பலவகைப்படும்.
parasomnia - தூக்கச் சீர்கேடு, பிறழ்வுறக்கம் - தூங்க முயலும் போதும், தூக்கத்தின் போதும், தூங்கி விழித்தெழும் போது மன ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்கள். இவை கனவாகவோ, அசாதாரணமான உடலியக்கங்களாகவோ, நடத்தையாகவோ, தூக்க உரையாடலாகவோ, உணர்வு வெளிப்பாடாகவோ இருக்கலாம். இந்தத் தூக்கச் செயல்களைப் பார்ப்பவர்களுக்கு, இது குறிக்கோளுடன் செய்யப்படுவதாகத் தோன்றலாம். ஆனால் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அதைப்பற்றிய பிரக்ஞை ஏதுமிருக்காது. விழித்தெழுந்தபின் அதைப்பற்றிய நினைவுகள் ஏதுமிருக்காது. கொடுங்கனவுகள், தூக்கத்தில் நடத்தல், பயத்தினால் படுக்கையில் சிறுநீர் கழித்தல், தூக்கத்தில் பேசுதல், தூக்கத்தில் ஏற்படும் மனத்தோற்றம் (சத்தம் அல்லது காட்சி தெரிவது போன்ற தோற்றம்), தூக்கத்தில் செயலழித்தல் போன்றவை தூக்கச் சீர்கெட்டின் அறிகுறிகளாகும்.
insomania - தூக்கமின்மை, துயிலொழிவு, உறக்கமின்மை, தூஙக முடியாமை - ஒருவரின் கவலை, மன அழுத்தம், வலி அல்லது பல்வேறு உடல் உபாதைகளால் அவருடைய கடமைகளில் கவனம் செலுத்த முடியாத அளவிற்குத் தொடர்ந்து நாட்கணக்கில் தூஙக முடியாதிருப்பது.
hypersomnia - இயற்கைக்கும் மீறிய நீண்ட தூக்கம், தூக்கமிகைப்பு, அதிகப் பகல் தூக்கம், விழித்திருக்க இயலா நிலை - மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கட்டிகளாலோ, தலைக்காயங்களாலோ, மருந்துகள் எடுத்துக்கொள்வதாலோ, மருந்துகளை நிறுத்துவதாலோ ஏற்படும் மட்டுமீறிய / கட்டுப்படாத் தூக்கம்.

English
A group of disorders involving chronic and persistent disturbances in sleep patterns, including abnormalities in the amount, quality or timing of sleep, abnormal behavioral or physiological events in association with sleep, or sleep disturbance patterns resulting from a variety of specified conditions. Among these disorders are primary sleep disorders (including dyssomnia and parasomnia), sleep disorders resulting from other mental disorders (insomnia and hypersomnia), and sleep disorders related to another mental disorder or substance abuse.