sleep terror disorder
தூக்க அச்சக் கோளாறு
தமிழ் விளக்கம்
தூக்கத்தில் பீதியடைந்து பயங்கர அலறலுடன் (Sleep Terror / Night Mare) படபடக்கும் இதயத்துடன், வியர்த்து விறுவிறுத்து, மூச்சிறைத்து விழிப்பதை தூக்க அச்சக் கோளாறு எனலாம். இப்படி விழிப்பவர்களின் பதட்டம் ஒரு நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அந்த நேரத்தில் அவர்களைச் சமாதானப்படுத்தவோ, சாந்தப்படுத்தவோ முயற்சி மேற்கொண்டால் எந்தப் பலனும் இருக்காது. அவர்களாகவே தூங்கி விழித்தபின் எல்லாவற்றையும் மறந்து போவார்கள். இதைத் தூக்கத்தில் அலறிப் புடைத்து எழுந்து கொள்ளும் கோளாறு என்றும் சொல்வர். தூக்கத்திலிருந்து எழுந்தபின் எதற்காக பயந்து, அலறிக்கொண்டு எழுந்தோம் என்பது கூடத் தெரியாது. இது தூங்கும் போது வரும் கொடுங்கனவு உருவாக்கும் அச்சத்திலிருந்து வேறுபட்டது. கொடுங்கனவை நினைவு கூறமுடியும். ஆனால் தூக்க அலறலுக்கான காரணத்தை நினைவு கூற முடியாது.
English
A sleep disorder characterized by repeated awakenings in a state of fright. The individual often cannot remember the source of the fear but awakens with a scream or with panicky escape movements. This condition, once known as "pavor nocturnus", differs from nightmare disorder in that the individual does not awaken as easily or remember the stimulus dream clearly.