sleepwalking disorder

தூக்கத்தில் நடக்கும் சீர்கேடு

தமிழ் விளக்கம்

‘Somnambulism’ என்பது தூக்கத்திலேயே நடப்பதைக் (Sleep walking) குறிக்கும். பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சிலமணி நேரங்களிலேயே இது நடைபெறுகிறது. தூக்கத்திலேயே எழுந்து, வெற்றுப் பார்வையோடு நடைபயிலக் கூடிய இவர்களோடு மற்றவர்கள் தொடர்பு கொள்ள இயலாது. இந்த நேரத்தில் இவர்களை விழிக்கச் செய்தலும், உணரச்செய்தலும் குழப்பமடையச் செய்துவிடும். கோபமடையச் செய்து விடும். மன நிலையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இக்குறை உள்ளவர்களில் சிலர் தூக்கத்திலேயே எழுந்து தனது படுக்கையை மட்டும் ஒரு சுற்றுச் சுற்றி ஒரு முறை நடந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார்கள். ஒரு சிலர் எழுந்து நின்று விட்டோ அல்லது உட்கார்ந்து விட்டோ மீண்டும் படுத்துக் கொள்வார்கள். வேறு சிலரோ கதவைத்திறந்து வெளியே அருகிலுள்ள சில இடங்களுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி படுக்கையில் படுத்துக் கொள்வார்கள். இத்தகைய பழக்கமுள்ளவர்கள் தூக்கத்திலே எழுந்து, வீடு தாண்டி, நடந்து தெருவை, சாலையைக் கடக்கும் போது ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, உரிய சிகிச்சை மூலம் பூரண குணமடையும் வரை இவர்கள் தூங்கும் சூழ்நிலையைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

English

A sleep disorder, parasomnia type, in which the individual arises from bed during sleep and moves about. The individual has reduced alertness and responsiveness and limited recall of the episode, which usually lasts for several minutes to a half-hour. The pattern is most common among children and ends in most people by age 15.