sliding fee scale

சலுகை / மாறுபட்ட / இறங்குமுகக் கட்டண விகிதம்

தமிழ் விளக்கம்

எல்லா வாடிக்கையாளர்களிடமும் தங்கள் சேவைக்கு ஒரே மாதிரியான சேவைக்கட்டணம் வசூலிக்காமல், வாடிக்கையாளர்களின் பொருளாதாரப் பின்னணியை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்களின் சேவைக்கட்டணம் செலுத்தும் திறனிற்கேற்ப, தங்களின் சேவைகளுக்கு மாறுபட்ட கட்டணங்களை வசூலிக்கும் சமூகப்பணியாளர்கள், சேவை நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறை.
பார்க்க: Flat rate fee - சமமான / ஒரேமாதிரியான / தட்டையான கட்டணம் - தன்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு, அவர்களின் பொருளாதாரப் பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல் வசூலிக்கப்படும் ஒரே மாதிரியான சேவைக்கட்டணம்.

English

The practice, found among many social agencies and workers, in which clients are charged fees for service based on their ability to pay rather than on a fixed rate established in advance for everyone who receives the same service. See also flat-rate fee.