slow learner

மெதுவாகக் கற்பவர்

தமிழ் விளக்கம்

குறிப்பிட்டுச் சொல்லும்படியான மனநோயோ, மனவளர்ச்சிக் குறைபாடோ, உடல் ரீதியான பிரச்சனைகளோ அல்லது வேறு சிறப்புக் கவனமும் தேவைப்படாத இயல்பான சிறுவர்கள், கல்வியில் சராசரிக்கும் குறைவான இலக்கை எட்டமுடியாதபோது அவர்கள் மெதுவாகக் கற்பவர்கள் எனப்படுகின்றனர். மெதுவாகக் கற்கும் குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு 75-90 க்குள் இருக்கின்றது. இவர்களால் கற்க முடியுமென்றாலும், இவர்களின் சரியினையானவர்களுடன் ஒப்பிடும் போது, புதுக் கருத்துக்களை உள்வாங்குவதிலும், பகுத்தறியும் மற்றும் தருக்கத் திறன் குறைவுபட்டுமிருப்பதை அறியலாம். ஒன்றைக் கற்றுக்கொள்ள அதிக நேரமேடுத்தும், திரும்பத் திரும்ப படித்தும், ஆசிரியர்களுடைய உதயோடும் இவர்களை சராசரியாக் கற்றுக்கொள்ள வைக்கலாம்.

English

A descriptive term for students whose below-average academic achievements may not be attributable to mental illness, retardation, physical problems, or special needs. Most students who are so described have been intelligence tested in the intelligence quotient (IQ) range of 75 to 90 (above those who are considered educably mentally retarded but below those who are considered average). However, many students begin to make progress after successful help with emotional or social relationship problems.