slum

குடிசைப் பகுதிகள்

தமிழ் விளக்கம்

நகர்ப்புறங்களில், தங்களுக்கு உரிமையில்லாத இடங்களில், தூக்கியெறியப்பட்ட பழைய பொருட்களைக்கொண்டு கட்டப்பட்ட குடிசைகளில், குறைந்த வருமானப்பிரிவினர் அடர்த்தியாக, நெருக்கமாக வாழும், அழுக்கான, சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற நகர்ப்புறப் பகுதிகள். தங்களுக்குச் சொந்தமல்லாத இடங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் குடியிருப்பதால், அவர்களால் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள், பள்ளி வசதிகள், காவல்துறைப் பாதுகாப்பு போன்ற வசதிகளைக் கோரமுடியாது. இந்த மாதிரியான குடிசைப்பகுதிகள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளின் நகர்ப்புறங்களில் மிக அதிக எண்ணிக்கையில் உருவாகி வருகின்றது.
பார்க்க: slum -சேரிப்பகுதிகள் - சிதிலமடைந்த, குடியிருக்கப் பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட வீடுகளைக் கொண்ட, குறைந்த வருவாய்ப்பிரிவினர் வாழும் குடியிருப்புப் பகுதிகள்.
ghetto - சேரிப்பகுதி - நகரத்தில் பெரும்பான்மையான யூதர்கள் வாழும் பகுதி - குறைந்த வருவாய்ப் பிரிவினரோ, பாரபட்சத்தின் காரணமாக மத, இன, சமூக, கலாச்சார ரீதியாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நகர்ப்பகுதி.
barriadas - அமெரிக்காவில் குறைந்த வருமானமீட்டும் ஸ்பானீஷ் மக்களுக்கான குடியிருப்பைக் குறிக்கும் சொல்.

English

A concentration of deteriorating buildings, many of which are inhabited by people who are economically and socially deprived.