Smith, Zilpha Drew (1852-1926)
ஸ்மித் ஜில்பா ட்ரூ (1852 - 1926)
தமிழ் விளக்கம்
ஸ்மித் ஜில்பா ட்ரூ (1852 - 1926) - அறக்கட்டளைச் சங்கங்கள் வளரவும், பரவலாகவும் பாடுபட்ட சமூகப்பணியாளர். நட்பார்ந்த வருகையினர் / நண்பராகச் செயல்படும் பார்வையாளர் என்ற ஏற்பாட்டின் மூலம் உதவிகோரி வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, பொருத்தமான உதவிகளைச் செய்யும் நடைமுறையை அமுல்படுத்தியவர். சமூகப்பணிக் கல்வியாளரான மேரி ரிச்மாண்ட் (Mary E. Richmond) மூலம் நட்பார்ந்த வருகையினருக்கு முறையாகப் பயிற்சி வழங்கத் திட்டமிட்டவர். இந்தப் பயிற்சி முறையிலிருந்துதான் சமூகப்பணிக் கல்வி உருவாகி வளர்ந்தது. தாய்மார்களுக்கான பல உதவித் திட்டங்களைச் செயல்படுத்தியவர். குடும்பப் பிரச்சனைகள் பற்றியும், குடும்பங்கள் எதனால் நிலைகுலைகிறது என்பது பற்றியும் எழுதியவர். 1904 ஆம் ஆண்டில் புகழ் பெற்ற பாஸ்டன் சமூகப்பணிக் கல்லூரியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வழிநடத்தியவர்.
English
An early developer of the charity organization societies (COSs) and the friendly visitor approach to intervention. A strong advocate for training for friendly visitors, she helped Mary E. Richmond develop educational plans for them. She also developed programs for mother's aid and wrote about problems of family breakdown.