smoke-free society
புகையற்ற சமூகம், புகையிலையில்லா சமூகம்
தமிழ் விளக்கம்
சிகரெட், சுருட்டு, ஹூக்காக்களை சட்டத்தின் மூலமோ, விதிமுறைகளின் மூலமோ அல்லது அதை கிடைத்தற்கரியதாய்ச் செய்வதன் மூலமோ சமூகத்திலும் நாட்டிலும் இல்லாமலாக்குவது. உலகப் புகையிலையில்லா, புகையற்ற நாளைக் கொண்டாடுவதன் நோக்கமே, புகையிலையும், புகையிலையில் தயாரான பொருட்களும் மனித உடல்நலத்திற்கு எவ்வளவு தூரம் தீங்கு விளைவிக்கின்றது என்பது பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகப்பணியாளர்களும் அவர்களின் வாடிக்கையாளர்களும், பிறருடன் இணைந்து, புகையிலையிலிருந்து வெளிப்படும் நிகோடின் நச்சு, புகைப்போருக்கும், புகைப் பழக்கமில்லாதவர்களுக்கும் எவ்வளவு தூரம் ஆரோக்கியக் கேட்டை விளைவித்து பொருளாதாரச் சீர்கேடுகளை உருவாக்குகின்றது என்பதை எடுத்துரைத்து, புகையிலை நுகர்வை அகற்றப் பாடுபடுகிறார்கள்.
English
The absence of cigarette, cigar, and pipe-tobacco smoking in a community or nation through legislation, norms, or lack of access. Many social workers and their clients have joined others in working to eliminate smoking tobacco consumption because of concerns about health risks to smokers and non-smokers, nicotine's addictive properties, and economic costs to smokers and taxpayers.