social action

சமூகச் செயல்பாடு

தமிழ் விளக்கம்

தனி நபர் ஒருவர் தன்னுடைய செயல்களுக்கு மற்றவர்கள் எப்படி எதிர்வினை / பதில் வினையாற்றுவார்கள் என்பதைச் சிந்தித்து செயல்பட ஆரம்பித்தாலே சமூகவியலில், அது சமூகச் செயலாகிறது. தனிநபர்களின் செயல்களும், அதற்கான செயலெதிர்ச் செயல்களும் சமூகச் செயல்பாடு என்று சமூகவியல் குறிக்கின்றது. ஆனால், சமூகப்பணியிலும், வளர்ச்சிப் பணியிலும் இது இன்னும் விரிவாகப் பொருள் கொள்ளப்படுகிறது. ஒரு சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யவோ, சமூகப் பிரச்சனையைத் தீர்க்கவோ, சமூக அநீதியைச் சரி செய்யவோ, மேம்பட்ட வாழ்க்கத் தரத்தை அடையவோ அமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்ய எடுக்கப்படும் ஒருங்கிணைந்த முயற்சியை சமூகச் செயல்பாடெனலாம். இந்த முயற்சியை சமூக நலம், பொருளாதாரம், அரசியல், சமயம், இராணுவப் பொறுப்பிலிருப்பவர்களோ, மாற்றத்தை விரும்பும் மக்களோ அல்லது பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்களோ துவக்கி, தலைமை ஏற்று வழிநடத்தலாம்.
2. சமூகப்பொருளாதார அரசியல் காரணங்களினால், சலுகைகள் மறுக்கப்பட்ட பெருவாரியான மக்களின் மேம்பாட்டிற்குத் தடையாக உணரப்பட்ட அரசு, தனியார் அல்லது அதற்குக் காரணமான அமைப்புகள் / நிறுவனங்களுக்கு எதிராகவோ, அல்லது அதற்குக் காரணமான அதிகாரக் குழுக்களுக்கு எதிராகவோ, அல்லது கொள்கைகளுக்கு எதிராகவோ, அதை மாற்றவும், அகற்றவும், அவைகளுடன் முரண்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களாலோ அல்லது அவர்கள் பங்கேற்புடன், அவர்கள் மீது அக்கறை கொண்ட உயர் வகுப்பினராலோ தொடங்கப்பட்டு, நோக்கம் நிறைவேறும்வரை கடைப்பிடிக்கப்படும் மோதல் போக்கையே சமூகச் செயல்பாடு என்கிறோம்.

English

A coordinated effort to achieve institutional change to meet a need, solve a social problem, correct an injustice, or enhance the quality of human life. This effort may occur at the initiative and direction of professionals in social welfare, economics, politics, religion, or the military, or it may occur through the efforts of the people who are directly affected by the problem or change.