social adult day care

வயது வந்தோரின் சமூகத் தேவைப் பராமரிப்பகங்கள், வயது வந்தோருக்கான சமூகத் தொடர்பாடலுக்கான பகல் நேரப் பராமரிப்பு

தமிழ் விளக்கம்

உடல் மனப் பிரச்சனையில்லாத, வீட்டில் தனித்து விடப்பட்ட வயது வந்தோரின் சமூகத் தொடர்பாடல் தேவைகளைப் பூர்த்திசெய்யச் செயல்படும் பராமரிப்பகங்கள். இந்தப் பராமரிப்பகங்கள், அமெரிக்க மைய அரசு, மாநில அரசு, மருத்துவ உதவித் திட்டம், தனியார் காப்பீடு நிறுவனங்களின் நிதி உதவியுடன், வாரத்திற்கு ஐந்து நாட்கள், வயதுவந்தோரை அவர்கள் வீட்டிலிருந்து அழைத்து வந்து, மதிய உணவு அளித்து, அவர்களின் சமூகத் தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
வயது வந்தோரை (முதியவர்களை) பகலில் பராமரிப்பது - உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ இயலாத, முக்கியப் பராமரிப்பாளர்களின் தொடர் கவனிப்பு கிடைக்கப்பெறாத முதியவர்களுகளின் சுயபராமரிப்புப் தேவைகளையும், அவர்கள் வாழும் வீட்டைப் பராமரிக்கத் தேவையான பணிகளையும் அவர்களின் இல்லங்களிலோ, அல்லது பகல்நேரப் பராமரிப்பகங்களிலோ வைத்து செய்துதரப்படும் சேவைகள்.

English

Community programs and facilities for adults whose social functioning has become impaired and who can no longer function independently. Many such facilities provide transportation to and from the client's home, a midday meal, and a variety of recreational and social programs five days weekly while family members are at work. Most funding comes from federal or state allocations, Medicaid, or private insurance.