social agency

மக்களுக்குத் தொண்டு புரியும் தொழில்முறை நிறுவனம்

தமிழ் விளக்கம்

agency என்ற ஆங்கில வார்த்தை நிறுவனம், முகமையகம், செயலாண்மை, ஒரு செயலைச் செய்ய உதவும் கருவி, ஒன்றின் மீதான நடவடிக்கை என்று பல பொருளைத் தருவது போல் இருந்தாலும், அது பொதுவாகக் குறிப்பிட்ட வரையறைக்குள் ஒரு குறிக்கோளை அடைய உதவும் வழிமுறைகளைக் குறிக்கின்றது. Social Agency என்பதை சமூக நிறுவனம் என்று மொழிபெயர்த்தாலும், அதன் உட்பொருள் சமூக சேவை நிறுவனம் அல்லது மக்களுக்குத் தொண்டு புரியும் தொழில்முறை நிறுவனம் என்ற பொருளிலே கையாளப்படுகிறது.
சமூக சேவைகளைச் செய்ய, ஒரு இயக்குனர் குழுவின் ஆதரவில் / வழிகாட்டுதலில், மனித சேவைப் பணியாளர்கள் (சமூகப்பணியாளர்கள் மற்றும் பிறர்) உதவிப் பணியாளார்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியாற்றும் நிறுவனம் அல்லது இவர்களால் தரப்படும் வசதிகள் சமூக நிறுவனம் அல்லது சமூக சேவை நிறுவனம் என்றழைக்கப்படுகிறது. சமூக சேவை நிறுவனங்கள், குறிப்பிட்ட சமூகப் பிரச்சனைக்குள்ளானவர்களுக்கோ, இடர்ப்பாடுகளுக்குள்ளானவர்களுக்கோ, குறிப்பிட்ட மக்களுக்கோ வரையறைக்குட்பட்ட சேவைகளை வழங்கும். கருணையுள்ளவர்களின் நிதியுதவியாலும், இரந்து பெற்ற நிதியாலும், அரசு மற்றும் பிற உதவியாலும், சேவைக்கட்டணத்தின் மூலம் பெறப்படும் நிதியாலும், அவர்களின் சேவைகளுக்கு மூன்றாம் தரப்பினர் வழங்கும் கட்டணத்தாலும் இந்த நிறுவனங்கள் தங்களுக்கான நிதியைப் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் அதன் இயக்குனர் குழு அல்லது ஆட்சிக்குழுவிற்குக் கட்டுப்பட்டது. இந்த இயக்குனர்களே நிறுவனத்தின் குறிக்கோள்களை நிச்சயிக்கின்றார்கள். நிறுவன நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் நிச்சயிக்கப்பட்ட குறிக்கோள்களை அடையத் தேவையான செயலில் ஈடுபடுகிறார்கள். எந்த மாதிரியான மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அவர்களின் பிரச்சனைகளை எந்த முறைகளைக் கையாண்டு தீர்க்க வேண்டும் என்பதைப்பற்றி தெளிவான விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் வகுத்திருக்கும். அரசின் சமூகப்பாதுகாப்பு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், சமுதாய மன நல மையங்கள் போன்ற அரசு அலுவலகங்களையும் தனியார் தொண்டு நிறுவனங்களையும் சமூக நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

English

An organization or facility that delivers social services under the auspices of a board of directors and is usually staffed by human services personnel (including professional social workers, members of other professions, paraprofessionals, clerical personnel, and sometimes indigenous workers). The agency provides a specified range of social services for members of a population group that has or is vulnerable to a specific social problem. The agency may be funded by combinations of philanthropic contributions and privately solicited donations, by governments, by fees paid by those served, or by third-party payment. Social agencies are accountable to their boards through accessible financial records, statements of purpose, and representatives from the community who serve on the boards of directors. The board members set overall policy, and administrators coordinate activities to carry out those policies. The organization has explicit bylaws that determine which clients to serve, what problems to combat, and what methods to use in providing service. Public organizations, such as social security offices, hospitals, and community mental health offices, are considered social agencies, as are private organizations such as Family Service America (FSA) offices, Lutheran Social Services (LSS), and Catholic Charities USA.