Social and Occupational Functioning Assessment Scale (SOFAS)
சமூகம் மற்றும் தொழில்சார் செயல்பாட்டை மதிப்பிடும் அளவுகோல்
தமிழ் விளக்கம்
ஒரு நபரின் பணி மற்றும் சமூகம் தொடர்பான செயல்பாடுகளை, 100 மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பீடு செய்ய அமெரிக்க மனநல மருத்துவக் கழகம் வடிவமைத்த அளவுகோல். இந்த அளவுகோளின்படி 81 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் திறனுடன் செயல்படும் நிலையினர். திறம்படச் செயல்பட முடியாதவர்கள், தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியாதவர்கள், 20 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெறுகிறார்கள்
பார்க்க: severity index - கடுமைக் குறியீட்டெண், கடுந்துயரக் குறியீட்டெண் - தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களது பிரச்சனைகளின் தீவிரத் தன்மையைக் குறிக்கச் சமூகப்பணியாளர்கள் கையாளும் குறியீடு. இக்குறியீடு Peron -in- Environment என்ற மானுடச் சூழல் கண்ணோட்டம் / சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம் / மானுடச் சுற்றாடல் தொகுப்பு என்ற நடைமுறையைப் பின்பற்றிக் கொடுக்கப்படும் குறியீடு. தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் அல்லது பொதுவாக மனிதர்கள் சக மனிதர்களுடன் சமூகத்தில் செயல்படும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், அதை வகைப்படுத்தி விளக்கவும் சமூகப்பணியாளர்கள் கையாளும் ஒரு அறிதல் முறை. இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம், தங்களிடம் வரும் முழாள்களின் (வயதிற்கு வந்தவர்கள் - adult) சமூகச் செயல்பாடுகள் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் முறையாகச் சேகரிக்கவும் அதனடிப்படியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மதிப்பீடு செய்யவும் சமூகப்பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையின்படி வாடிக்கையாளரின் பிரச்சனைகளை ஆறு நிலைகளாக வகைப்படுத்துகிறார்கள் 1. செயலிழைக்க வைக்கும் தன்மை கொண்டது (catastrophic), 2. அசாதாரணமான கடுமை கொண்டது (very high severity), 3. அதிகக் கடுமை கொண்டது (high severity), 4. மிதமான கடுமை கொண்டது (moderate severity), 5. குறைந்த கடுமை கொண்டது (low severity), 6. பிரச்சனை ஏதுமில்லை (no problem).
Global Assessment Scale (GAF) - உலகளாவிய மதிப்பீடு அளவுகோல் - வயதிற்கு வந்தவர்களின் சமூக, தொழில்சார், உளவியல் செயல்பாட்டையும், அவர்கள் தங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கின்றார்கள் என்பதை அறிய உதவும் எண்கள் சார்ந்த (0 முதல் 100 வரை) உலகளாவிய மதிப்பீடு அளவுகோல்.

English
A 100-point scale in development by the American Psychiatric Association to assist in the clinician's evaluation of the degree to which an individual maintains job-related and social functions not directly related to existing psychological symptoms. Individuals who function most effectively score highest (81100), whereas those unable to function independently and maintain minimal standards of personal hygiene score lowest (1-20). See also severity index.