social capital

சமூக மூலதனம்

தமிழ் விளக்கம்

சமூக மூலதனம் என்பது ஒரு சமுதாயத்தை ஒன்றாகப் பிணைக்க உதவும் பசை போன்றது. அது அச் சமுதாயத்தில் வாழும் மக்களின் திறன்கள், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பரஸ்பர நம்பிக்கைகள், பரஸ்பர மரியாதை / அபிமானத்தின்படி உருவாக்கப்பட்ட உறவு முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலமாக பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளல் போன்றவற்றை குறிக்கும்.
சமூக மூலதனம் என்பது சமூகத் தொடர்புகளை மையப்படுத்தி உருவாகும் பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு, அதனடிப்படையில் சமுதாயம் முழுவதும் பயன்படும்படியான பொருளுற்பத்தி மற்றும் சேவைகள் போன்றவற்றை குறிக்கும் பொருளாதார மற்றும் கலாச்சார செயல்பாடுகளைக் குறிக்கும். இந்தச் சொல்லாடல், ஒரு சமுதாயத்தின் கண்டுணரக்கூடிய பவுதீக வளங்களையும் (எ.கா. பொது இடங்கள், நீர்நிலைகள், பிற இயற்கை வளங்கள்), அந்த வளங்களை பேண் தகு முறையில் கையாளும் மனப்பக்குவத்தையும், அங்கு வாழும் மக்களிடம் வெளிப்படையாக கண்டுணரமுடியாத, ஆனால் பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள முடிந்த திறன்கள் மற்றும் ஆற்றலை குறிக்கும். கண்டுணரக்கூடிய பவுதீக வளங்களை பொறுப்புடன் கையாளும் மனப்பக்குவத்தையும், கண்டுணரமுடியாத மானுட ஆற்றலை சமூக மற்றும் பொது நலனுக்காக பயன்படுத்த வைக்கும் ஒட்டுமொத்த சூழலைக் குறிக்கும். சமூக மூலதனம் என்பது சமுதாயம் முழுமைக்கும் பயன்படும்படியான, பொது நன்மையை உருவாக்கும் மூலதனம் என்று கொள்ளலாம். இந்த மூலதனமே பல்வேறு குழுக்களின் செயல்திறனை மேம்படுத்தவும், புதிது படைப்போருக்கான ஏதுவான சூழ்நிலையை உருவாக்கவும், எதையும் கையாளத்தக்க நிர்வாகத் திறனை வெளிப்படுத்தவும், கூட்டுச் செயல்பாடுகள் மூலமாக எந்த ஒன்றின் மதிப்பை உயர்த்தவும் பயன்பட்டு, ஒரு மக்கள் கூட்டம் ஒரு சமுதாயமாக பரிணமிக்க உதவுகிறது.
பவுதிக மூலதனம் என்பது கண்டுணரக்கூடிய பவுதீக வளங்களைக் குறிக்கிறது. மானுட மூலதனம் என்பது மனிதருக்குள் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த ஆற்றலைக் குறிக்கிறது. சமூக மூலதனம் என்பது மனித உறவாடல்களில் உருவாகும் நமபகத்தன்மை அதையொட்டி உருவாகும் பரஸ்பர உதவிகளைக் குறிக்கும். சுருக்கமாக சமூக மூலதனத்தை, சமூகச் சார்பு நடத்தையால் உருவாகும் குடிமை நல உணர்வு / சமுதாய நற்குணங்கள் எனலாம். சமூகச் சார்பு நடத்தை என்பது பரஸ்பர உறவு முறைகளில் நிலைபெறும்போது அது வேறெந்த மூலதனத்தை விடவும், வலிமையான சமூகத்தை கட்டமைக்க உதவுகிறது. நற்குணங்கள் படைத்த ஆனால் தனித்திருக்கும் / ஒதுங்கியிருக்கும் நபர்கள் செல்வந்தர்களாக இருப்பினும் அவர்கள் சமூக மூலதனமாக / உந்து சக்தியாகக் கருதப்படுவதில்லை.
சமூக மூலதனம் என்பது ஒரு சமுதாயத்தில் செயல்படும் நிறுவனங்களைக் குறிப்பதில்லை. மாறாக சமூக மூலதனம் என்பது ஒரு சமுதாயத்தை ஒன்றாகப் பிணைக்க உதவும் நிறுவனங்கள், சமுதாய உறவு முறைகளைத் தீர்மானிக்கும் மதிப்பீடுகள், நெறிமுறைகளின் அளவு மற்றும் தரம் போன்றவற்றை உள்ளடக்கியது.

English

Social capital is a form of economic and cultural capital in which social networks are central, transactions are marked by reciprocity, trust, and cooperation, and market agents produce goods and services not mainly for themselves, but for a common good.
The term generally refers to (a) resources, and the value of these resources, both tangible (public spaces, private property) and intangible ("actors", "human capital", people), (b) the relationships among these resources, and (c) the impact that these relationships have on the resources involved in each relationship, and on larger groups. It is generally seen as a form of capital that produces public goods for a common good.
Social capital has been used to explain the improved performance of diverse groups, the growth of entrepreneurial firms, superior managerial performance, enhanced supply chain relations, the value derived from strategic alliances, and the evolution of communities.
Social Capital is the glue that holds a community together? It is a collection of human capital invested in the common life of a community.” It includes people skills and abilities, institutions, and networks of trusting relationships. It refers to organizations and networks that unite members into communities of mutual respect and shared responsibility.