social care
சமூகக் கவனிப்பு
தமிழ் விளக்கம்
இது அடிப்படையில் சமூக சேவையைக் குறிக்கும் ஐரோப்பியச் சொல்லாடல். இயல்பான வளர்ச்சித் தேவைகள் உள்ளவர்களுக்கும், எதிர்பாராத இழப்புகளுக்குள்ளானவர்களுக்கும், சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கும், பொருள்வடிவிலான (ஸ்தூலமான) சமூக சேவைகள் வழங்கல், ஆலோசனை சொல்லல், உறவுகளைச் சரிசெய்வதே தீர்வு முறையாகக் கையாளப்படும் குடும்ப சிகிச்சை போன்ற உதவி முறைகளைச் செய்வதே சமூகக் கவனிப்பு எனப்படும். மனிதர்கள் எல்லோரும் ஏதாவதொரு நேரத்தில் இடர்ப்பாடுகளுக்குள்ளாகி, வெளி உதவிகள் நாடவேண்டிவரும் என்ற அனுமானத்தில் தன்னார்வலர்களாலும், தொழில் துணைவர்களாலும், உள்ளூர் தொண்டர்களாலும் வழங்கப்படும் சேவைகள். இடர்ப்பாடுகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், நோயாலோ, இயலாமையாலோ, முதுமையாலோ, வறுமையாலோ உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்யப்படும் தனிமனித உதவிகள், சமூகப் பாதுகாப்பு, சமூக நலச் சேவைகள் போன்றவை இதிலடங்கும். அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சமூக நலம், சமூக சேவை, சமூகப்பணி என்ற சொல்லாடல்களுக்கு இணையாக, ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ள சொல்.
English
The provision of concrete and especially relationship-based social services for those people with normal developmental needs as well as extraordinary dependency and deprivation problems. The social care concept emphasizes that all people, at least sometimes, have needs for some social services and that many of these services can be provided by a volunteer, paraprofessional, or indigenous worker. This system is more prominent in international social work than in the United States.