social casework
சமூகத் தனி நபர் / தணியாளர் பணி
தமிழ் விளக்கம்
மானுடத்தைப் பற்றிய கண்ணோட்டம், அக்கண்ணோட்டத்திலிருந்து பெறப்பட்ட நெறிகளின் மீது உருவான விருப்பார்வம், அந்த விருப்பார்வத்தின் அடிப்படையில் உருவான செயல்முறைகளைக் கையாண்டு உளசமூகக் கோட்பாடு (psychosocia)l, நடத்தைக் கோட்பாடு (behaviour) மற்றும் அமைப்புக் கோட்பாடுகளிலிருந்து (system) பெற்ற அறிவைச் செயல்திறனாக்கி, அதன் மூலம் மனிதர்களின் உள்மனப் பிரச்சனைகள் (intra psychic), மனிதர்களுக்கிடையேயான பிரச்சனைகள் (interpersonal), சமூகப்பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் புறச் சூழலிலிருந்து உருவாகும் பிரச்சனைகளைத் தீர்க்க, பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு (face -to- face) உதவ, சமூகப்பணியாளர்கள் கையாளும் அணுகுமுறையைச் சமூகத் தனிநபர் பணி எனலாம். பெரும்பாலான சமூகபணியாளர்கள் சமூகத் தனிநபர் பணியை, பிணி சார்ந்த சமூகப் பணிக்கு இணையாகக் கருதுகின்றார்கள்.
பார்க்க: Casework - தனி நபர்களும் சமூகமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாலும், சமூக நிலைமைகள் தனிமனிதரின் மனப்பாங்கையும், நடத்தையையும் பாதிப்பதாலும், அந்தப் பாதிப்பினால் தனது அன்றாடப் பிரச்சனைகளை எதிர்கொள்ளச் சிரமப்படும் தனிமனிதர்களுக்கு, அவர்களின் பிரச்சனை மற்றும் இயல்புக்கு ஏற்றவாறு உதவி செய்யும் தொழில்முறையிலான வழிமுறையாகும். பிரச்சனையுள்ளவருக்கும் / வாடிக்கையாளருக்கும், அவரது சூழல் அனைத்துக்குமோ அல்லது சூழலின் ஒரு பகுதிக்குமோ இடையில் ஆரோக்கியமான சீரமைவை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுவதுதான் தனிநபர் சமுதாயப்பணி.

English
The orientation, value system, and type of practice used by professional social workers in which psychosocial, behavioral, and systems concepts are translated into skills designed to help individuals and families solve intrapsychic, interpersonal, socioeconomic, and environmental problems through direct face-to-face relationships. Many social workers consider social casework to be synonymous with clinical social work practice.