social causation theory
சமூகத் தூண்டல் கோட்பாடு, சமூக சற்காரிய வாதம் (சமூகத்தில் இருப்பதே வெளிப்படும்
தமிழ் விளக்கம்
உள்ளதே தோன்றும், இல்லாது தோன்றாது) - பாதுகாப்பற்ற, இடர்பாடுகள் நிறைந்த சமூகப் பொருளாதார நிலைமைகளை அனுபவிக்க நேருபவர்கள் அதிகமான அளவில் மனநோய்களுக்கும் சமூகப் பிரச்சனைகளுக்கும் உள்ளாவர்கள் என்று சொல்லும் அனுமானம். சில குறிப்பிட்ட சமூகப் பொருளாதாரப் பிரிவினிரிடையேயும், சில இனக்குழுக்கள் மற்றும் நிறக்குழுக்களிடையேயும், சில பூகோளப் பிராந்தியத்தில் வசிப்போரிடையே அதிக அளவிலும், அடிக்கடியும் ஏற்படும் மனநோய்கள், வறுமை, விவாகரத்து, குடும்ப வன்முறை போன்றவை, அவர்கள் வாழும் சமூகத்தினால், அங்கு நிலவும் பண்பாட்டுச் சூழனினால் ஏற்படுகிறது என்பதை விளக்க இக்கருத்தாக்கம் பயன்படுகிறது.
English
The idea that insecure and stressful economic and social conditions strongly increase the probability that a given individual experiencing them will develop social problems or mental disorders. This theory is often advanced to explain why there is a higher incidence rate and prevalence rate of mental illnesses, poverty, divorce, spouse abuse, and so on among people of certain socioeconomic classes, ethnic and racial backgrounds, and geographic areas of residence.