social change
சமூக மாற்றம்
தமிழ் விளக்கம்
சமூக மாற்றம் என்பது ஒரு சமூகத்தின் ஒழுங்கமைவில் காலப்போக்கில் ஏற்படும் திருத்தங்களாகும். ஒரு சமூகத்தின் அடிப்படை மனநிலைகள், அறங்கள், ஆசாரங்கள் எல்லாமே அச்சமூகத்தில் கருத்து நிலையாக உறைந்து, அது அச்சமூக இயல்பாக, சமூக அமைப்புகளாக, சமூகப் பழக்கவழக்கங்களாக (மரபுகள்), சமூக உறவுகளாக, உற்பத்தி முறைகளாக மாறுகின்றன. தனி மனிதர்களிடத்தில் தனிமனித இயல்புகளாக உருவெடுக்கின்றது. சமூக மாற்றம் என்பது, மேலே சொன்ன எல்லாவற்றிலும் காலப்போக்கில் ஏற்படும் கண்டுணரத்தக்க (observable) மாற்றங்களாகும். இந்த மாற்றங்களில் முக்கியமானவை, சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டு தொழிற்புரட்சி, அடிமை ஒழிப்பு, பெண் விடுதலை, வாக்குரிமை, உலகமயமாதல்.
English
Variations over time in a society's laws, norms, values, and institutional arrangements.