social class
சமூக வகுப்பு, வர்க்கம்
தமிழ் விளக்கம்
சமூகவியலில், வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூகப் பொருளாதார நிலையிலுள்ள, ஒரே அளவு சமூக அந்தஸ்து, அதிகாரம், கல்வித்தகுதி படைத்த, மக்களின் குழுவைக் குறிக்கும். கடந்த காலத்திலிருந்தே, சமூகத்தில் நிலவும் வகுப்பு (வர்க்க) வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். தத்துவஞானியான அரிஸ்டாட்டில், செல்வர், வறியவர், இடைநிலையினர் என்று சமூகத்தை மூன்று வகுப்புகளாகப் (வர்க்கங்களாகப்) பிரித்துக் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியக் கோட்பாட்டை நிறுவியவரான கார்ல் மார்க்ஸ், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வகுப்பினராகப் (வர்க்கத்தினர்) பிரித்தார். ஆடம் சிமித் என்னும் பொருளியல் அறிஞர் தொழிலாளர், நில உடமையாளர், வணிகர் என்னும் மூன்று வகுப்பினர் பற்றிக் குறிப்பிட்டார். இவர்கள் தவிர வேறு பலரும் சமுதாயத்தை வகுப்புகளாகப் பிரித்துள்ளார்கள். இவற்றுள் பொதுவாகக் காணப்படும் தன்மை என்னவெனில், இவர்கள் எல்லாருமே வர்க்கப் பிரிவுகளுக்கான அடிப்படையாகச் செல்வத்தை ஏற்றுக் கொண்டதேயாகும்.
English
A category of people in a society, ranked according to such criteria as relative wealth, power, prestige, educational level, or family background.