social control
சமூகக் கட்டுப்பாடு
தமிழ் விளக்கம்
1. சமூக ஒழுங்கைப் பராமரிக்க, மனித நடத்தைகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளின் தொகுப்பைச் சமூகக் கட்டுப்பாடு எனலாம். 2. சமூக ஒழுங்கை ஸ்திரமாகப் பரிபாலிக்கவும், சமூக மாற்றங்களைச் சரியாகக் கையாளவும், ஒரு சமூகத்தாலோ அல்லது அதிலுள்ள சில உறுப்பினர்களாலோ எடுக்கப்படும் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியை சமூகக் கட்டுப்பாடு எனலாம். 3. சமூகம் ஏற்றுக்கொண்ட ஒழுங்குமுறைகளை, சட்டங்களை, மக்களைப் பின்பற்ற வைக்க கட்டாயப்படுத்தும் முறைகளைச் சமூகக் கட்டுப்பாடு எனலாம். 4. சமூகக் கட்டுப்பாடு என்பது மக்களை சமூக விதிமுறைகளுக்கு அனுசரித்துச் செல்ல செய்யப்படும் நிர்பந்தம் எனலாம்.
English
1. The organized effort of a society or some of its members to maintain a stable social order and to manage the process of social change. 2. Efforts to constrain people, requiring them to adhere to established norms and laws.