social Darwinism

சமூக டார்வினிசம், சமூகப் பரிணாம வளர்ச்சி

தமிழ் விளக்கம்

உயிரனங்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கிய சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை, குறிப்பாக இயற்கைத் தேர்வை அடிப்படையாக வைத்து, இங்கிலாந்தின் சமூகவியலாளரான ஹெர்பெர்ட் ஸ்பென்சர் சமூகப் பரிணாமத்தை உருவகப்படுத்தக் கையாண்ட சொல்லாடலான, தக்கது பிழைக்கும் அல்லது வலியது செழிக்கும் / வாழும் என்ற கருத்தே சமூக டார்வினிசம் எனப்படுகிறது. சமூகத்தில், வியாபாரப் பரிமாற்றங்களில் போட்டி இயல்பானதென்றும் அதைத் தவிர்க்க முடியாதென்றும், போட்டியிட இயலாதவர்கள், போட்டியிடத் திராணியற்றவர்கள் இயல்பாகவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள் அல்லது ஓரங்கட்டப்படுவார்கள் என்று ஸ்பென்சர் விளக்கமளித்தார். இயலாதவர்கள், தாழ்ந்தவர்கள் இயற்கையாகவே ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், திறமையானர்வர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வார்கள் என்றும் கூறினார். சமூகப்பொருளாதார விவகாரங்களில் அரசு தலையீடு இருக்கலாகாதென்றும், சுய உதவியின் மூலமே ஏழைகள் வறுமையிலிருந்து மீளமுடியுமேன்ற ஸ்பென்சரின் கருத்து, ஆரம்ப கால சமூக நலக் கண்ணோட்டத்தில் பெரிய அளவு செல்வாக்குச் செலுத்தியது.

English

The philosophy first articulated by English sociologist Herbert Spencer (1820-1903), who coined the phrase "survival of the fittest" and applied Charles Darwin's theories of evolution to human economic conditions. The philosophy suggested that competition was normal and inevitable, that those who could not compete would be eliminated through natural selection, that only those who were inferior or inadequate to survive in society would be poor, and that the laissez-faire economic system was best because self-help was the only way out of poverty. This philosophy has had great influence in the development of social welfare policy in the United States.