social distance

சமூக தூரம், சமூக இடைவெளி, சமூகசேய்மை

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்திற்குள், ஒரு குழுவுக்குள், சமூகப் பொருளாதார வகுப்பினற்குள், அல்லது அச்சமூகத்தின் ஒரு பிரிவிற்குள், அதன் உறுப்பினர்களுக்குள் நிகழும் நெருக்கம், ஒதுக்கம், விலக்கம், சமூக நகர்திறன் அல்லது நிலைபெயர்வு போன்றவற்றைக் குறிக்கும் சொல்லாடல். இது இடம் சார்ந்த தொலைவிலிருந்து வேறுபட்டது. சமூக இடைவெளி உணர்வு சார்ந்ததாகவும், நெறி சார்ந்ததாகவும், தொடர்பாடல் சார்ந்ததாகவும் அமையும். சில கலாச்சாரங்களில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி தழுவிக் கொள்வதில் கூட வேறுபாடுகளை, இடைவெளிகளை உணரலாம். எடுத்துக்காட்டு - தீண்டாமை.

English

The relative degrees of isolation, aloofness, intimacy, and social mobility among people that occur or are permitted within a society or part of that society (such as a family, a group of workers, or a socioeconomic class). For example, one culture might discourage and another might encourage physical embraces between men.