social ecology

சமூகச் சூழலியல்

தமிழ் விளக்கம்

சமூகச் சூழலியல் என்ற சொல்லாடல், மூரே பூக்கன் (Murray Bookchin - 1921 – 2006) என்ற அமெரிக்கக் கிளர்ச்சியாளர் மற்றும் தத்துவாசிரியரால், மக்களுக்கும் அவர்கள் வாழும் சூழலுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய முக்கியத்துவத்தை விளக்க உபயோகப்படுத்தப்பட்டது. சமூகச் சூழல் கோட்பாடு என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து உயிரினங்களையும், நீலம், நீர், காற்று போன்ற அனைத்து இயற்பியல் கூறுகளையும், சமூகப் பொருளாதார அரசியல் கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கி. இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி விளக்குவதாகும். மேலும், சமூகச் சூழலியல் கோட்பாடு, தற்கால சமூக, அரசியல் போக்குகள் எப்படிச் சூழலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற விமர்சனத்தை முன்வைத்து, சுற்றுச் சூழலை சீராக்கப் பன்முகத்தன்மை, படைப்பாற்றல், சுதந்திரமான, ஜனநாயக அமைப்பில், தார்மீக உற்பத்தி மற்றும் விநியோக முறைகளின் அடிப்படையில் சமூகமும் உலகமும் கட்டமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

English

The study of the reciprocal and adaptive relationship between the natural environment and human society.