Social Exclusion
சமூக விலக்கம், சமூக தவிர்ப்பு, சமூக வெளியேற்றம்
தமிழ் விளக்கம்
வறுமையின் காரணமாகவோ அல்லது முதன்மைச் சமுதாயத்தின் (main society) பண்பாட்டுக் கூறுகளிலிருந்து மாறுபடுகின்ற, குடிவழக்குகளுக்கு மாறான துணைப் பண்பாடு (subculture) கொண்டவர்களையும், மாற்றுப் பண்பாடு கொண்டவர்களையும் (counter culture), சில வழிபாட்டு முறைகளில் வெறிஈடுபாடு (cult followers) கொண்டவர்களையும், சமூகச் செயல்பாடுகளில் சில அம்சங்களிலோ அல்லது முழுமையாகவோ பங்கேற்க விடாமல் தடை செய்வது அல்லது ஒதுக்கி வைப்பது. இது குறைந்த வருவாயினாலோ, இனத் துவேசத்தாலோ, ஒரு இனத்தின் அல்லது குழுவின் மீது ஏற்பட்ட தப்பெண்ணத்தாலோ / காற்புணர்ச்சியினாலோ ஏற்பட்டு, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்க தடையாகலாம். சமூக விலக்கம் என்பது ஏற்றத்தாழ்வான அதிகார உறவுகளை பொருளாதார, அரசியல், சமூக பண்பாட்டுத் தளங்களில் உருவாக்கி, தனிமனிதர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்களை பாதிக்கின்றது.
பார்க்க: mainstreaming - மையநீரோட்டம் என்பது வெகுஜன ஊடகங்களால் பரவலாக்கப்பட்ட சிந்தனைப் போக்கு. முதன்மைச் சமுதாயத்தின் (main society) பண்பாட்டுக் கூறுகளிலிருந்து மாறுபடுகின்ற, குடிவழக்குகளுக்கு எதிராக சிந்திக்கின்ற, நடக்கின்ற துணைப் பண்பாடு (subculture) கொண்டவர்களையும், மாற்றுப் பண்பாடு கொண்டவர்களையும் (counter culture), சில வழிபாட்டு முறைகளில் வெறிஈடுபாடு (cult followers) கொண்டவர்களையும், பெரும்பான்மையினரின் சிந்தனைப் போக்கிற்கு திருப்புதலே மைய நீரோட்டத்தில் இணைப்பது. துணை மற்றும் எதிர்ப் பண்பாட்டு சிந்தனையுள்ளவர்கள் மைய நீரோட்டப் பண்பாட்டை அழகிழந்த, ஜீவனற்ற பண்பாடு என்று கேலி பேசுவதுண்டு. ஆனால் மனித சேவைப்பணிகளில், குறிப்பாக சமூகப்பணியில் இயலாமையால் (disability) அவதிப்படும் குழந்தைகளை, இயல்பான குழந்தைகளோடு இணைவித்து கற்றுக்கொள்ள வைக்கும் முறையை மையநீரோட்ட அணுகுமுறை எனலாம் . இயலாமை காரணமாக அவர்களைப் பிரித்து அவர்களுக்கென்று விசேசக் கல்வி கொடுத்தாலும், அவர்களை இயல்பான குழந்தைகளுடன் இணைவிக்கவோ ஒருங்கிணைக்கவோ இயலாதாகையால் மையநீரோட்ட அணுகுமுறையே அதற்கு பொருத்தமானது.

English
Refers to barriers that prevent people from participating fully in society. These include low income, racism, racial profiling; barriers to employment and access to affordable housing; and barriers that prevent people from participating in the civic and political life of society. exclusion from the prevailing social system and its rights and privileges, typically as a result of poverty or the fact of belonging to a minority social group. Exclusion consists of dynamic, multi-dimensional processes driven by unequal power relationships interacting across four main dimensions - economic, political, social and cultural - and at different levels including individual, household, group, community, country and global levels. It results in a continuum of inclusion/exclusion characterized by unequal access to resources, capabilities and rights which leads to health inequalities. see mainstreaming