social functioning
சமூகத்தில் செயல்புரிதல் / செயலாற்றுதல் / கடமையாற்றுதல், சமூகத்தில் இயல்பாக இயங்குதல்
தமிழ் விளக்கம்
சமூகத்தில் செயல்படல் என்பது ஒருவர் தன்னுடைய கடமைகளையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கான கடமைகளையும் நிறைவேற்றுவதாகும். இந்தக் கடமைகள் ஒருவர் தனக்கானதும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்குமான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, சமூகப் பயனுள்ள காரியமாற்றுவதையும் குறிக்கும். கடமைகள் என்பது தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளைக் குறிக்கும். மனிதத் தேவைகளை உடல் சார்ந்தது (உணவு, இருப்பிடம், பாதுகாப்பு, மருத்துவ கவனிப்பு), மன நிறைவுக்கானது (கல்வி, பொழுதுபோக்கு, சீரான நெறிமுறைகள், அழகுணர்ச்சி, மதம் மற்றும் சாதித்தல்), உணர்வு நிறைவுக்கானது (சேர்ந்திருத்தல் / கூடியிருத்தல், பரஸ்பர கரிசனை காட்டுதல் மற்றும் உடனிருத்தல் / நெருக்கத் துணையாயிருத்தல்) மற்றும் சுய மரியாதைக்கானது (தன்னம்பிக்கை, சுய கவுரவம் மற்றும் சுய அடையாளம்) என்று வகைப்படுத்தலாம். சமூகப்பணியாளர்கள் தனி மனிதர்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்கள் தங்களின் சமூகக் கடமையாற்றலை இழந்திருக்கும் பட்சம் அதை மீட்டெடுப்பதும், அதை மேலும் செழுமையாக்குவதையுமே தங்களுடைய பிரதானமான கடமையாகக் கொண்டுள்ளனர். மக்களுடைய சமூகக் கடமையாற்றல் தேவைகளையும், அத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அவர்களுடைய திறன்களையும் சமநிலைப்படுத்துவதும், அதை ஒன்றிற்கு ஒன்று பொருத்தி வைப்பதுமே சமூகப்பணியாளர்களின் வேலைப் பொறுப்பாக உணரப்பட்டிருக்கின்றது.
English
Fulfilling one's roles in society in general to those in the immediate environment and to oneself. These functions include meeting one's own basic needs and those of one's dependents and making positive contributions to society. Human needs include physical aspects (food, shelter, safety, health care, and protection), personal fulfillment (education, recreation, values, esthetics, religion, and accomplishment), emotional needs (a sense of belonging, mutual caring, and companionship), and an adequate self-concept (self-confidence, self-esteem, and identity). Social workers consider one of their major roles to be that of helping individuals, groups, or communities enhance or restore their capacity for social functioning.