social goals model

சமூகக் குறிக்கோள் குழுக்கள்

தமிழ் விளக்கம்

சமூகக் குழுக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. சமூகக் குழுப்பணியில் குழு அடைய நினைக்கும் குறிக்கோள்களை மையமாக வைத்துக் குழுக்களை வகைப்படுத்தும் முறையை, கேதரின் பாபல் மற்றும் புயுலா ரோத்மன் பிரேரிபித்தனர். அவையாவன 1. தோழமைக்கான குழுக் குறிக்கோள் 2. பரிகார நோக்கங் கொண்ட (சிகிச்சை) குழுக் குறிக்கோள் 3. பரஸ்பர உதவிக் (சக உதவி) குறிக்கோள். 4. சமூக இலக்குகளுக்கான (இலட்சியங்களுக்கான) குறிக்கோள்.
(குழுவின் உறுப்பினர்களைப் பாதிக்கும் நிறுவனங்கள் மற்றும் நெறிமுறைகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்). ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக விரும்பிய மாற்றங்களைப் புரிந்துகொண்டு, செயல்படுவதைவிட, குழு முயற்சியின் மூலம் அதைத் திறம்படச் செய்யலாம்.
பார்க்க: Group goals model - சமூகக் குழுப்பணியில் குழு அடைய நினைக்கும் குறிக்கோள்களை மையமாக வைத்துக் குழுக்களை வகைப்படுத்தும் முறையை வகைப்பாட்டை கேதரின் பாபல் மற்றும் புயுலா ரோத்மன் பிரேரிiபித்தனர். 1.தோழமைக்கான குழுக் குறிக்கோள் 2. பரிகார நோக்கங் கொண்ட (சிகிச்சை) குழுக் குறிக்கோள்கள் 3. பரஸ்பர உதவிக்கான (சக உதவி) குறிக்கோள். (reciprocal goals model - ஒரு குழுச் சூழலில், குழு உறுப்பினர்களும் குழுவை வழி நடத்துபவரும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கற்றுக்கொண்டு, செல்வாக்கு செலுத்துவதன் மூலம், குழுவிற்கான இலக்குகளையும், தங்களின் தனிப்பட்ட இலக்குகளையும் தொடர்ந்து பரிசீலனைக்குட்படுத்தி செம்மைப்படுத்திக் கொள்வது.
remedial goals model - இழப்பீடு செய்யவல்ல / பரிகார நோக்கங் கொண்ட / குறை களைவு / நோய் போக்கும் / பிணிநீக்கும் / நோய்த் தீர்க்கும் / குறை நீக்கும் குழுப்பணி - சமூகக் குழுப்பணியில் குழு உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் அடைய விரும்பும் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையான குழுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன: சமூகச் செயல் நோக்கம் (Social goals) கொண்ட குழுக்கள், குறையை நீக்கிக் கொள்ள அல்லது பரிகாரம் நோக்கங்கொண்ட குழுக்கள் (remedial goals), பரஸ்பர உதவிக் குழுக்கள் (mutual aid goals. இதில் உளவியல் ரீதியாகவோ வேறுவகையிலோ குறைகளிருந்து அதனால் தனி, குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையில் இடர்ப்பாடுகளை சந்திப்பவர்களுக்கு உதவ, குறை களைந்து, இழந்ததை ஈடுசெய்யும் பரிகார நோக்கோடு ஆர்மபிக்கப்படும் குழுக்களை remedial groups என்பர். இக்குழுக்கள் பெரும்பாலும் உளவியல் சிகிச்சை முறைகளில் பயன்படுகிறது.

English

In social group work and therapy group conceptions, the group objective of bringing about social change in those institutions, norms, and structures that affect the group's members. The goal in this case is to help each member become more effective in recognizing and bringing about desired social changes; this is seen as often being more effective than individual efforts alone. See also reciprocal goals model and remedial goals model.