Social Gospel
சமூக நற்செய்தி
தமிழ் விளக்கம்
பிராட்டஸ்டன்ட் (கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்கள்) மதத் தலைவர்களாலும், அறிவுஜீவிகளாலும், தொழிலாளர்களின் நிலை மேம்பாடடையவும், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்படவும், பெண்களுக்கு வேலைப் பாதுகாப்பு அளிக்கவும், ஒவ்வொருவரும் வாழ்வூதியம் பெறவும், 1870 களில் அமெரிக்காவில் உருவாக்கிய சீர்திருத்த இயக்கம். தொழிற்சங்கங்கள் வலுப்பெற்றபின், 1930 களில் அரசே தொழிலாளர் நலத்திட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்தபின், இந்த இயக்கத்தின் வேகம் குறைந்தது.
English
The reform movement that occurred in the United States beginning in the 1870s under the sponsorship of Protestant leaders to advocate for improved conditions among workers, abolition of child labor, occupational protections for women, and the right to living wages. The movement declined when its goals were taken over by organized labor and by the federal programs established in the 1930s.