social group work

சமூகக் குழுப்பணி

தமிழ் விளக்கம்

ஒத்த ஆர்வமும், பொதுவான பிரச்சனைகளுமுள்ள, சிறிய எண்ணிக்கையிலான நபர்களை, தொடர்ந்து சந்திக்க வைத்து, அவர்களுக்குகந்த குறிக்கோள்களை அடையச் செயல்பட உதவும் சமூகப்பணியின் அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு முறையை சமூகக் குழுப்பணி எனலாம். இது உளப்பிரச்சனைகளுக்கான சிகிச்சையைப் பிரதானமாக வைத்துச் செயல்படும் உளப்பிணி சிகிச்சைக் குழுக்களிலிருந்து மாறுபட்டது. சமூகப்பணிக் குழுக்கள், தகவல் பரிமாறிக் கொள்ளவும், சமூகத் தொடர்பாடல் மற்றும் வாழ்வியல் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வாழ்வியல் கண்ணோட்டங்களை மாற்றிக்கொள்ளவும், சமூக விரோத நடத்தைகளிலிருந்து மனதை மாற்றிக்கொண்டு பயனுள்ள வாழ்வு வாழ உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகக் குழுப்பணியின் உதவு முறைகளில் வரையறுக்கப்பட்ட சிகிச்சை / அளவான சிகிச்சை முறைகளும் உண்டு. கல்வி, தனிப் போதனை, விளையாட்டு, கலை, கைத்தொழில், பொழுது போக்கு, அரசியல், மதம், பாலியல், சமூக நெறிகள், வாழ்வியல் குறிக்கோள்கள் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் என்று குழுப்பணி உதவுமுறைகள் பரந்துபட்டது. இருத்தலியல் கோட்பாடு (existential - தனிமனிதனுக்கு முக்கியத்துவம் தரும், தனிமனிதனே அறிவின் அடிப்படை அலகு என்ற இருத்தலியல் தத்துவம் - தனிமனிதனைப் பற்றி குறிப்புணர்த்துதல்), கற்றல் கோட்பாடு (learning), உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு (psychoanalyitic), சமூகப் பரிமாற்றக் கோட்பாடு (Social exchange) போன்ற பல கோட்பாடுகளிலிருந்து அறிவுத்தளத்தைப் பெற்று, அதை சமூக அமைப்பியல் கண்ணோட்டதில் ஆய்ந்து, குழுவின் செயல்பாடுகளுக்கு சமூகக் குழுப்பணி விளக்கமளிக்கின்றது. இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெற்ற கண்ணோட்டம், குழுவின் இயக்கவியலைப் புரிந்துகொள்ளவும், குழுவைக் கடந்த உறவுமுறைகளைப் புரிந்துகொள்ளவும் சமூகப்பணியாளர்களுக்கு பெருமளவு உதவுகிறது. இந்த அடிப்படையில் குழுப்பணியை 1. சமூக நோக்கை முன்மாதிரியாய்க் கொண்ட முறை, 2. பரஸ்பர செயல்களை / பயன்களை முன்மாதிரியாய்க் கொண்ட முறை 3. குணப்படுத்தலை முன்மாதிரியாய்க் கொண்ட முறை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பார்க்க: Remedial Group Model, Reciprocal Group Model, Group Goal Model, Socail Goal Model

English

An orientation and method of social work intervention in which small numbers of people who share similar interests or common problems convene regularly and engage in activities designed to achieve certain objectives. In contrast to group psychotherapy, the goals of group work are not necessarily the treatment of emotional problems. The objectives also include exchanging information, developing social and manual skills, changing value orientations, and diverting antisocial behaviors into productive channels. Intervention techniques include, but are not limited to, controlled therapeutic discussions. Some groups also include education and tutoring; sports; arts and crafts; recreational activities; and discussion about such topics as politics, religion, sexuality, values, and goals. Although social group work draws on the theoretical perspectives of existential theory, learning theory, psychoanalytic theory, and social exchange theory, its major theoretical perspective is social systems theory to describe group functioning. This orientation provides workers with a way to conceptualize about the effect of group dynamics and interrelationships outside the group. Social group work theorists delineate three major conceptions of group work: (1) the social goals model, (2) the reciprocal goals model, and (3) the remedial goals model. See also group development phases.