social history

சமூக வரலாறு

தமிழ் விளக்கம்

சமூக வரலாறு என்பது சமூகப்பணியில் ஒரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட சமூக வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பதாகும். இது ஒரு வாடிக்கையாளரின் நிகழ்கால மற்றும் கடந்தகால நிலைகளை நேர்பட ஆய்வு செய்த தகவல்களிலிருந்தும், மருத்துவப் பதிவேடுகளிளிலிருந்து பெறப்பட்ட தகவலகளைக் கொண்டு கொடுக்கப்படும் முழுமையான விளக்கமும், மதிப்பீடுமடங்கிய ஆவணம். இந்த ஆவணத்தில், ஒரு வாடிக்கையாளரின் குடும்ப மற்றும் சமூகப் பொருளாதாரப் பின்னணி மற்றும் பிரச்சனை தொடர்புடைய அவரின் வளர்ச்சிப் பருவ அனுபவங்கள் குறிக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்களைப் பேட்டி கண்டும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தும், அவரைப் பற்றிய ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளைப் பரிசீலித்தும், வாடிக்கையாளரையும் அவரின் சூழ்நிலையை நேரடியாகப் பார்வையிட்டும், வாடிக்கையாளர் பிரச்சனை தொடர்பான பிற நிபுணர்களையும், நிறுவனங்களையும் கலந்தாலோசித்தும், சமூகப்பணியாளர்கள் மற்றும் அவரின் உதவியாளர்களால் தயாரிக்கப்படும். வாடிக்கையாளரைப் பற்றி மதிப்பீடு. வாடிக்கையாளருக்கான உதவியைத் திட்டமிடுமுன்னர் சமூக வரலாறு தயாரிக்கப்படும். சமூகப்பணியாளர்களால் தயாரிக்கப்பட்ட சமூக வரலாறு மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர்கள் என்று பிற திறத்தொழிலினரும் சமூக வரலாற்றை உபயோகித்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவத் திட்டமிடுவதுண்டு. சமூக வரலாறு கால வரிசைப்படி எழுதப்பட்ட கூறுரைகளாகவோ அல்லது வகைப்படுத்தப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்ட ஆவணங்களாகவோ இருக்கும். தலைப்புகளாக எழுதப்படும் சமூக வரலாறு பெரும்பாலும் 9 தலைப்புகளில் எழுதப்படுகிறது. 1. பிரச்சனை பற்றிய அறிமுகம், 2. பிரச்சனையின் அறிகுறிகள், 3. பிரச்சனை உருவான வாரலாறு (அது தொடர்ந்து நிகழும் சம்பவமா அல்லது அவவப்போது நிகழும் உணர்வெழுச்சியா), 4. தற்போதைய நிலைமை (குடும்பம், வேலை, பொருளாதார நிலை மற்றும் தொடர்புடைய சுற்றுச் சூழல், சமூக, ஆரோக்கிய நிலைமை), 5. குடும்பப் பின்னணி (பெற்றோர், தாத்தா பாட்டி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கிய மற்றும் உளவியல் தன்மை), 6. கல்வி மற்றும் தொழில் பின்னணி, 7. வாடிக்கையாளரின் இலட்சியம், 8. சமூகப்பணியாளரின் மதிப்பீடு, 9. சமூகப்பணியாளரின் பரிந்துரை (உதவி செய்வதற்கான திட்டமிடல்). இந்த சமூக வரலாற்றில், சமூகப்பணியாளர் பணியாற்றும் நிறுவனத்தின் தேவை அல்லது நோக்கங்களுக்கு ஏற்பக் கூடுதலான விவரங்களையும் சமூகப்பணியாளர் இணைத்துக் கொள்ளலாம்.

English

An in-depth description and assessment of the current and past client situation, often included in the case records and medical records of clients. It is a document that describes the person's family and socioeconomic background and relevant developmental experiences. Typically, this document is prepared by social workers and social work assistants based on interviews with the client and members of the client's family, reviews of records and reports, consultation with other professionals and agencies, and direct observation of the client and the client's environment. The social history often precedes and forms the basis for social work assessment and service planning. It may also be used by other professionals, such as physicians, lawyers, and teachers, in their own decision making to serve the client. Many social histories are written in a narrative, chronological fashion. Others are organized topically. They frequently include the information under specific headings similar to the following nine headings: (1) presenting problem, (2) symptoms of the problem, (3) history of the problem (including recurring situations or repetitious psychological events), (4) current situation (including family; job; economic status; and relevant environmental, social, and health factors), (5) family background (including parents, grandparents, and other close relatives and relevant health and psychological factors about them), (6) educational and vocational background, (7) client goals (including relevant goals of immediate members of the client's family), (8) social worker's assessment, and (9) social worker's recommendations (including social work treatment plans). The history also may include other information the social worker deems relevant to the presenting problem, goal, or agency function.