social indicators
சமூகக் குறிகாட்டிகள், சமூக நிலை காட்டிகள்
தமிழ் விளக்கம்
தனி மனிதர் மற்றும் சமுதாயங்களின் சேமநிலையை / நல்வாழ்வு நிலையை விளக்கும் அளவுகளாகும். இந்த அளவுகள் ஒரு நிலையையோ அல்லது பல நிலைகளையோ உள்ளடக்கி, சுட்டெண்களாக (index) மாற்றப்படுவதுண்டு. சமூகக் குறிகாட்டிகள் / நிலை காட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுட்டெண்களை வைத்தே தனி நபர்கள் மற்றும் சமுதாயத்தின் சமூக, பொருளாதார, உளவியல் நலநிலை மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கேற்ப திட்டமிடல் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு வகையான சமூகக் குறிகாட்டிகள் திட்டமிடுபவர்களால் கையாளப்படுகின்றன. அவையாவன சிறுவர் வளர்ச்சிச் சுட்டெண், ஊழல் உணர்தல் சுட்டெண், குடியாட்சிச் சுட்டெண், சூழல் செயற்பாட்டுச் சுட்டெண், ஆற்றல் பேண்தகைமைச் (sustainable) சுட்டெண், கல்விச் சுட்டெண், சூழல் பேண்தகைமைச் சுட்டெண், சூழல் இடர்ப்பாடு சுட்டெண், பாலியல் சமத்துவச் சுட்டெண், பால்சார் வளர்ச்சிச் சுட்டெண், மொத்தத் தேசிய மகிழ்நிலை, உண்மை முன்னேற்றக் குறியீடு, மொத்தத் தேசிய உற்பத்தி, மகிழ் கோள குறியீடு, மனித வளர்ச்சிச் சுட்டெண், பேண்தகு (sustainable) பொருளாதாரப் பொதுநலச் சுட்டெண், வாழ்நாள் எதிர்பார்ப்புச் சுட்டெண், பேண்தகு ஆளுகைக் குறியீடுகள், பேண்தகு சமூகச் சுட்டெண் போன்றவை முக்கியமானதாகும்.
English
Quantitative measures about demographic, environmental, and societal conditions that are used in establishing comprehensive and balanced planning.