social inequality
சமூக சமத்துவமின்மை, சமூக சமமின்மை / ஒப்பின்மை / ஏற்றத் தாழ்வு
தமிழ் விளக்கம்
சமூக சமத்துவமின்மை என்பது சமூகத்தில் ஒருசிலர் குறைவான வாய்ப்புகளையும், பயன்களையும் பெரும் நிலையைக் குறிக்கும். ஒவ்வொரு தனிமனிதரிடமும் வெவ்வேறு அளவில் அமையப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் உடல் வலிமை, நாவன்மை, அறிவுத்திறன் ஆகியவை தொடர்பான சமத்துவமின்மையைக் கடந்து, திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும் செல்வம், வருவாய், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் நிலவும் சமத்துவமின்மையையும் குறிக்கும்.
English
A condition in which some members of a society receive fewer opportunities or benefits than other members.