social institution

சமூக (நிலையான) ஒழுங்கமைப்பு முறை, சமூக பழக்க வழக்க மரபு, சமூக நிறுவனம் (நிறுவனம் வெளிப்படுத்தும் செயல்முறைகள்)

தமிழ் விளக்கம்

ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட, பிரத்யேகமான சமூகக் கலாச்சாரப் பணிகளை நிறைவேற்ற உருவான சம்பிரதமயமாக்கப்பட்ட, மரபாக்கப்பட்ட, ஒழுங்குமுறைகள் / விதிமுறைகள் / உறவுமுறைகள் / பழக்க வழக்கங்கள். Social Institutions / Social Organaizations என்ற ஆங்கில வார்த்தைகள், சமூக நிறுவனம் / சமூக அமைப்பு என்று ஒரே பொருள் தரக்கூடிய சொல்லாடலைப் பயன்படுத்தினாலும், இரண்டிற்குமிடையே வேறுபாடு உள்ளது. கோவில் என்பது சமூக அமைப்பு (social organization) மதம் என்பது நிறுவனம் / ஒழுங்கமைப்பு (institution), வீடு என்பது சமூக அமைப்பு. குடும்பம் என்பது நிறுவனம், அரசாங்கம் என்பது சமூக அமைப்பு, சமூக நலம் என்பது சமூக நிறுவனம்.

English

A formal organization of relationships whose purpose is to serve a specific and unique sociocultural function. Examples of social institutions include religion, the family, military structures, government, and the social welfare system.