social insurance

சமூகக் காப்பீடு / காப்புறுதி, சமூக ஈட்டுறுதி

தமிழ் விளக்கம்

அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதுமை, இயலாமை, குடும்பக் காப்பாளர் மரணம், வேலையின்மை, நோய்வாய்ப்படுதல் மற்றும் வேலையின் போது ஏற்படும் விபத்து போன்ற இடர்ப்பாடுகளிலிருந்து மக்களுக்குப் பொருளாதார ரீதியாகவோ அல்லது சேவை வடிவிலோ பாதுகாப்பளிக்கச் செயல்படுத்தபடும் திட்டங்களை சமூகக் காப்புறுதி திட்டங்கள் அல்லது இடர் காப்புறுதி எனலாம். பெரும்பாலான சமூக நலத்திட்டங்கள் இவ்வகையில் அடங்கும். சமூகக் காப்பீடு திட்டங்கள், விருப்பக் காப்பீடு திட்டங்களைப் போலில்லாமல், கட்டாயப் பங்களிப்பையும் பங்கேற்பையும் கோருகின்றது. வருமானத் தகுதியை அடிப்படையாகக் கொள்ளாமல், உத்தேசமான தேவைகளின் அடிப்படையில், கொடுக்கவிருக்கும் பயன்களை சமூகக் காப்பீடு திட்டங்கள் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கும். அதாவது தனியார் காப்பீட்டு நடைமுறையில் உள்ள கட்டுப்பண மதிப்பிற்கு ஏற்றமாதிரி பயன்களைத் தருவது போலல்லாமல் சமூகக் காப்பீட்டில் உத்தேசமான தேவைகளின் அடிப்படையில் இருக்கும். இந்தியாவில் பொது மக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பயனளிக்கக்கூடிய பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவைகளில் கட்டாயக் கட்டுப்பணம் செலுத்தியும் (தொழிலார்களுக்கானது), அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடர்ப்பாடுகளை ஈடுகட்ட செய்யும் நலத் திட்டங்களும் அடங்கும்.

English

Government programs to protect citizens against statutorily stipulated risks, such as old age, disability, death of a breadwinner, unemployment, and work-related injury and sickness. Social insurance programs are characterized by compulsory contributions and participation, presumptive needs, clearly defined benefit formulas, and the absence of the means test. Unlike private insurance programs, benefits under social insurance programs are not necessarily proportional to contributions. Major social insurance programs in the United States are Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI), Unemployment Insurance, workers' compensation, and state temporary disability insurance.