social learning theory

சமூகக் கற்றல் கோட்பாடு

தமிழ் விளக்கம்

மனிதர்கள் தங்களின் சுற்றுச் சூழலையும், பிற மனிதர்களையும் பார்ப்பதன் மூலமும், சகமனிதர்கள் செயல்படும் விதத்தைப் பாவிப்பதன், முன்மாதிரியாகக் கொள்வதன் மூலமும், ஒரு செயலைச் செய்வது எந்தெந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து / கற்றுக்கொள்கிறார்கள். மனித நடத்தை என்பது சுற்றுச் சூழல், தனது மற்றும் பிறரது நடத்தைகளையும் அதன் விளைவுகளையும் பார்ப்பதன் மூலமாக உருவாகும் உள்ளார்ந்த அறிதிறன் செயல்பாட்டின் விளைவு என்று ஆல்பெர்ட் பந்தூர (Albert Bandura) என்ற உளவியலறிஞர் விளக்கினார். இந்தக் கோட்பாட்டை நடத்தை மாற்றச் சிகிச்சையில் உபயோகிப்பதை, சமூகக் கற்கைச் சிகிச்சை என்கின்றனர். பிற மனிதர்களின் நடத்தையையும், அதன் விளைவுகளையும் பாவனை செய்யும், முன்மாதிரியாகக் கொள்ளும் இந்தக் கற்றல் முறை, குற்றத் தடுப்பில் மீள் சமூகமயமாக்கல் (Re- Socialization), வளர்ச்சிப் பருவம் மற்றும் நிர்வாக இயலில் அபிவிருத்தி சமூகமயமாக்கல் (Development Socialization), மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூகமயமாக்கல் (Victim Socialization) போன்ற பல தளங்களில் பயன்படுகிறது
பார்க்க: learning theory - கற்றல் கோட்பாடு - கற்றல் என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாகப் பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது வலுவூட்டல் ஆகும். இதன்போது வேறுபட்ட தகவல்களின் உருவாக்கமானது நடைபெறுகின்றது. கற்கும் திறனானது மனிதர்களிலும், விலங்குகளிலும், சில வகை இயந்திரங்களிலும் காணப்படுகின்றது. கற்றல் என்பதற்குச் சில சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. இது காலத்துடன் மாற்றமடைந்து செல்லும். அத்துடன் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உடனடியாக பெறப்படும் விளைவும் அல்ல. இது சூழ்நிலைகளினால் வடிவமைக்கப்படக் கூடியது. அதாவது சூழ்நிலை சார்ந்தது. கற்றலானது ஏற்கனவே பெற்ற அறிவில் தங்கிக் காணப்படுகின்றது. இது நாம் பெற்ற அறிவின் திரட்டு என்பதைக்காட்டிலும், இது படிப்படியாக சேரும் படிமுறை சார்ந்த வளர்ச்சி என்பதே பொருத்தமானதாகும். கற்றலானது கற்பவரை மாற்றமடையச் செய்து, அந்த மாற்றங்களை நிரந்தரமானவையாக்கும். மனிதனின் கற்றலானது கல்வி, சுயமுன்னேற்றம், பாடசாலை, பயிற்சிகள் என்பவற்றினால் உருவாக்கப்படுகின்றது. இது ஒரு இலக்கை நோக்கியதாகவும் ஊக்கப்படுத்தலினால் அதிகரிப்பதாகவும், வலுவடைவதாகவும் அறியப்பட்டுள்ளது.
modelling - மாதிரியமாக்கல், மாதிரியமைத்தல், முன்மாதிரியாக்கல், நேரொப்புடையதாக்கல் - நடத்தைச் சிகிச்சை முறையிலும், சமூகக் கற்றல் முறையிலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் நடத்தையைப் போன்று நடக்கத் தூண்டப்படுதல்.
reciprocal casuation - ஏற்றெதிர் விளைவுகள், இணைக்கிணை விளைவுகள், பரஸ்பர விளைவுகள் - சூழியல் கண்ணோட்ட அடிப்படையில் சமூக உறவுகளுக்கும், சமூகப் பரிமாற்றங்களுக்குமான காரண காரியத் தொடர்புகள் என்பது நேர்க்கோட்டுப் பாதையில் செல்லாதெனவும், அது பெரும்பாலும் வட்ட வளையமாக ஒரு காரணத்திலிருந்து பிறக்கும் காரிய விளைவுகள், பிறிதொரு காரணத்தை உருவாக்கி, பிறிதொரு விளைவை உண்டாக்கும் என்ற இயங்கியல் விளைவைக் கூறும் கண்ணோட்டம். இக்கண்ணோட்டம், தனிமனிதப் பிரச்சனைகளை, மனிதர்களின் ஆளுமைக் குறைபாடாகப் பார்க்காமல் அவர்களின் சுற்றுச் சூழல் பரிமாற்றங்களின் விளைவு என விளக்குகிறது.

English

The conceptual orientation and treatment application that builds on and modifies principles of behaviorism, taking into account some internal cognitive processes. The major developer of this theory, which emphasizes reciprocal relationships and the ability to learn new responses through observing and imitating others, has been psychologist Albert Bandura.