social marketing
சமூகச் சந்தைப்படுத்தல், சமூக நற்செயல்களைப் பரப்புதல்
தமிழ் விளக்கம்
சமூகச் சந்தைப்படுத்தல் என்பது சந்தைப்படுத்தலின் பொதுவான உத்திகளைக் கையாண்டு, தனிமனிதர்கள் மற்றும் சமுதாயங்களின் அணுகுமுறைகள், கண்ணோட்டங்கள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதன் மூலம், தனிமனித மற்றும் சமூக வாழ்வை மேலும் பயனுள்ளதாக்கச் செய்யப்படும் முயற்சி. எடுத்துக்காட்டாக, புகைப் பழக்கத்தை நிறுத்த வேண்டுவதும், பயணத்தின் போது இருக்கை வார்களை பயன்படுத்த வேண்டும், தலைக்கவசம் அணியவேண்டுமென்று கேட்டுக்கொள்வதையும், அல்லது வேக வரம்பைக் கடைப்பிடிக்க வாகன ஓட்டிகளைத் தூண்டுதல் செய்வதையும் கூறலாம். சமூகச் சந்தைப் படுத்தலுக்கென்று தனியான உத்திகள் ஏதுமில்லை. அது வணிக ரீதியான சந்தைப்படுத்தல் உத்திகளை, வணிக ரீதியால்லாத இலக்குகளை அடைய உபயோகப்படுத்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். சமூக சந்தைப்படுத்தலின் முதல் குறிக்கோள் 'நல்ல சமூகம்' உருவாக்குவதாகும், மாறாக 'வணிகரீதியான சந்தைப்படுத்துதலின்' முதல் குறிக்கோள் 'வருவாய்' சார்ந்தாகும். இருப்பினும் வணிகரீதியான சந்தைப்படுத்தல் பலநேரங்களில் சமூகப்பயனுள்ள செய்திகளைச் சொல்லும் முறையும் நடைமுறையில் உண்டு.
English
Activities designed to generate interest and demand by consumers, resource suppliers, licensing and credentialing organizations, and the general public for the services of social agencies. The social marketer's role, unlike that of the traditional social planner, is to help the public find ways and resources to use those services as well as to facilitate their existence. See also market strategy.