social movement
சமூக இயக்கம்
தமிழ் விளக்கம்
ஒரு தேசத்திலோ அல்லது சமூகத்திலோ, சட்டத்தை, பொதுக் கொள்கைகளை அல்லது சமூக மரபுகளை மாற்றக்கோரியோ அல்லது புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தக்கோரியோ பலதரப்பைச் சேர்ந்த மக்கள் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செய்யும் முயற்சி. சுதேசி இயக்கம் (Swadeshi Movement) அமைதிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்பு இயக்கம் (Save Silent Valley Movement) சிப்கோ இயக்கம் (Chipko Movement) நர்மதை அணை எதிர்ப்பியக்கம் (Narmada Bachao Andolan) ஊழல் தடுப்பு இயக்கம் (Anti Corruption Movement) மக்கள் அறிவியல் இயக்கம் (People's science movement) சுயமரியாதை இயக்கம் (Self-Respect Movement) போன்ற மக்கள் இயக்கங்களை இந்திய எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
English
An organized effort usually involving many people representing a wide spectrum of the population to change a law, public policy, or social norm. Examples of social movements include the temperance movements, the Townsend Plan, and various equal rights movements.