social networks
சமூக வலைப்பின்னல்
தமிழ் விளக்கம்
பொதுவான பிணைப்பினாலோ, சமமான சமூக அந்தஸ்தினாலோ, ஒரே மாதிரியான கடமைகளைச் செய்வதாலோ, சேர்ந்து செயல்புரிய வேண்டுமென்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தைச் சேர்ந்திருப்பதாலோ அல்லது கலாச்சாரத் தொடர்பினாலோ தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்படும் இணைப்பை சமூக வலைப்பின்னல் எனலாம். சமூக வலைப்பின்னல்களின் வடிவமும், ஆயுட்காலமும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. அது தேவைக்கேற்ற மாதிரி, பங்கெடுப்பவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ற மாதிரி, தற்காலிகமானதாகவோ அல்லது அதிக ஆயுள் கொண்டதாகவோ அமையலாம். சுய உதவிக் குழுக்கள், ஆதரவுக் குழுக்கள், பழைய மாணவர் குழுக்கள் என்று சமூக வலைப்பின்னல்கள் பலவகைப்படும்.
English
Individuals or groups linked by some common bond, shared social status, similar or shared functions, or geographic or cultural connection. Social networks form and discontinue on an ad hoc basis depending on specific need and interest. Included as some of the many types of social networks are the support system, the natural helping network, self-help groups, and groups of formal organizations that address a common problem.