social planning
சமூகத் திட்டமிடல்
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட நோக்கங்களையடைய, தொலைநோக்குப் பார்வையுடன், சமூகப்பொருளாதார அமைப்புகளை உருவாக்கி, அது ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளை, சமூக மாற்றத்தை சரியாகக் கையாள எடுக்கப்படும் திட்டமிட்ட முயற்சிகளைச் சமூகத் திட்டமிடல் எனலாம். சமூகப்பணியில், சமுதாய அமைப்பு முறையில் சமூகத் திட்டமிடல் முக்கியச் செயல்முறையாகக் கையாளப்படுகிறது. தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் மூலமாக முறையாகத் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட்ட தேவைகளையும், அதைப் பூர்த்தி செய்வதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளையும் பகுத்தாய்ந்து, அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரமுள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்று நிறைவேற்ற முயல்வது சமூகத் திட்டமிடுபவர் கடமையெனக் கருதப்படுகிறது.
English
Systematic procedures to achieve predetermined types of socioeconomic structures and to manage social change rationally. These procedures usually include designating some individual or organization to collect the facts, delineate alternative courses of action, and make recommendations to those empowered to implement them. Social planning is one of the methods of social work practice.