social policy
சமூகக் கொள்கை
தமிழ் விளக்கம்
தனி மனிதர்கள், குழுக்கள், சமுதாயங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான உறவுகளில் தலையிட்டு அதை ஒழுங்குபடுத்தவும், வழிநடத்தவும் ஒரு சமூகம் எடுக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் நெறிமுறைகளைச் சமூகக் கொள்கை எனலாம். ஒரு சமூகத்தின் மரபுகளிலிருந்தும், விழுமியங்களிலிருந்தும் பெறப்பட்ட சமூகக் கொள்கைகளும், அதையொட்டிய செயல்பாடுகளும் சமூக வளங்களை எப்படி விநியோகிப்பது என்பதைத் தீர்மானித்து, மக்களின் நல்வாழ்வு நிலையைத் தீர்மானிக்கின்றது. சமூகக் கொள்கை என்பதில், அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் முன்னெடுக்கும் கல்வி, சுகாதார வசதிகள், குற்றத் தடுப்பு மற்றும் சீர்திருத்தம், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளடங்கும். இதுதவிர ஒரு சமூகம் ஒரு சிலவற்றிற்கு அனுமதியளிப்பதும் ஒரு சில செயல்களைக் கட்டுப்படுத்தும் சமூகக் கண்ணோட்டங்களும் கூட சமூகக் கொள்கையில் அடங்கும். சமூகக் கொள்கை என்பது சமூகத்தின் மொத்தச் செயல்பாடுகளையும் உள்ளடக்கிய விரிவான பொருள் கொண்டிருந்தாலும், அது குறிப்பாக மனித நலனுக்கு உகந்த வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகாட்டு முறைகள், நெறிமுறைகள் மற்றும் சட்டங்களைக் குறிக்கும்.
English
The activities and principles of a society that guide the way it intervenes in and regulates relationships between individuals, groups, communities, and social institutions. These principles and activities are the result of the society's values and customs and largely determine the distribution of resources and level of well-being of its people. Thus, social policy includes plans and programs in education, health care, crime and corrections, economic security, and social welfare made by governments, voluntary organizations, and the people in general. It also includes social perspectives that result in society's rewards and constraints.