social problems
சமூகப் பிரச்சனை
தமிழ் விளக்கம்
ஒரு சமூக நிகழ்வோ (வறுமை, தொற்று நோய்) அல்லது நடத்தையோ (போதைப் பழக்கம், இலஞ்சம் வாங்குதல்) சமூகத்தின் ஒரு சில பிரிவினரையோ அல்லது ஒட்டுமொத்த சமூகத்தையோ பாதிப்புள்ளாக்கி, அது மாற்றப்படவேண்டுமென்று, சமூகக் கரிசனமுள்ள ஒரு சிலரையோ, அல்லது பொதுமக்களில் கணிசமானவர்களையோ அக்கறை கொண்டு செயல்பட வைக்கும் நிகழ்வை சமூகப் பிரச்சனை எனலாம். 2. உள்ளூர் அளவிலோ, சமுதாய அளவிலோ அல்லது உலக அளவிலோ நடக்கும் நிக்ழ்ச்சிகள், பெருவாரியான மக்களைத் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்ற உணர்தலே சமூகப் பிரச்சைகள் இருப்பதற்கான அடையாளம். 3. எந்த சமூக நிகழ்வுகள் பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்புக்கள், மதிப்பீடுகளிலிருந்து விலகி, அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்பத்தைத் தந்து, அதிலிருந்து விடுபடவேண்டும் என்ற உத்வேகத்தை தருகின்றதோ அந்த நிகழ்வுகளைச் சமூகப் பிரச்சனைகள் எனலாம். எ.கா. வறுமை, சமத்துவமின்மை, போதைப் பழக்கம், விவாகரத்து, இனத்துவேசம்.
English
Conditions among people leading to social responses that violate some people's values and norms and cause emotional or economic suffering. Examples of social problems include crime, social inequality, poverty, racism, drug abuse, family problems, and maldistribution of limited resources.