social psychiatry
சமூக உளநல மருத்துவம், சமூக உளப்பிணி மருத்துவம்
தமிழ் விளக்கம்
உளநல மருத்துவத்திலும், உளப்பிணி சிகிச்சையிலும், குடும்பச் சூழல், பொருளாதாரப் பின்னணி, சுற்றுச் சூழல் நிலைமையின், (சமூகக் காரணிகள்) முக்கியத்துவத்தை வலியுறுத்திய உளப்பிணி சிகிச்சை அணுகுமுறை. மன நோய்களைத் தடுப்பதிலும், மனநோயாளிகளுக்கு சமுதாயத்திலே வைத்து சிகிச்சை தரவேண்டுமென்ற கண்ணோட்டமுடைய மருத்துவ அணுகுமுறை. இந்த அணுகுமுறையை முன்னெடுத்து அறிமுகப்படுத்தியவர் டாக்டர் அடோல்ப் மேயர் (Dr. Adolph Meyer) என்ற மன நல மருத்துவர். மனப்பிணி சிகிச்சையிலும், மனநோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்தளிலும் சமூகப்பணியாளர்களின் சேவையை அறிமுகம் செய்தவர்.
English
The orientation in the medical profession of psychiatry that emphasizes the family, economic, and environmental contributions to mental illness and a treatment approach that encompasses prevention and community treatment. This approach originated with Dr. Adolph Meyer in the early 1900s and involved social workers in patient aftercare.